'தெற்கு வளர்கிறது; வடக்கிற்கும் சேர்த்து வாரி வழங்குகிறது' முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்
'தெற்கு வளர்கிறது; வடக்கிற்கும் சேர்த்து வாரி வழங்குகிறது' முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்
ADDED : பிப் 16, 2024 12:38 AM
சென்னை;''அரசின் கொள்கை அறிக்கையாக, அமைச்சரவை தயாரித்து தருவதை, அப்படியே சட்டசபையில் வாசிக்க வேண்டியது கவர்னரின் கடமை. ஆனால், கவர்னர் செய்தது சட்டசபையை அவமானப்படுத்தும் செயல்,'' என, முதல்வர் ஸ்டாலின் கூறினார்.
சட்டசபையில், நேற்று முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது:
ஒரு காலத்தில், 'வடக்கு வாழ்கிறது; தெற்கு தேய்கிறது' என, நாமே முழங்கினோம். இன்று, 'தெற்கு வளர்கிறது.
சட்டசபை மரபு
வடக்கிற்கும் சேர்த்து தெற்கு வாரி வழங்குகிறது' என்ற அளவிற்கு நாம் வளர்ந்துள்ளோம். இத்தகைய தகுதியும் பெருமையும், தமிழகத்திற்கு திராவிட இயக்கத்தால் கிடைத்தது.
கடந்த, 12ம் தேதி கவர்னர் உரையுடன், சட்டசபை நடவடிக்கைகள் துவங்கி இருக்க வேண்டும். ஆண்டின் துவக்கத்தில், கவர்னர் உரையாற்றுவது சட்டசபை மரபு.
அரசின் கொள்கை அறிக்கையாக, அமைச்சரவை தயாரித்து தருவதை, அப்படியே சட்டசபையில் வாசிக்க வேண்டியது கவர்னரின் கடமை.
ஆனால், கவர்னர் தன் அரசியல் நடவடிக்கைகளின் தொடர்ச்சியாக, சட்டசபையையும் பயன்படுத்திக் கொண்டாரோ என்று கருதும் வகையில் நடந்து கொண்டார்.
இது, தமிழக சட்டசபையை அவமானப்படுத்தும் செயல் அல்லவா; கோடிக்கணக்கான தமிழக மக்களை அலட்சியப்படுத்தும் காரியமல்லவா; மக்களாட்சி மாண்புக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில், அரசியல் சட்டத்தை மீறி, ஏற்றுக் கொண்ட பதவிப் பிரமாணத்துக்கு மாறாக செயல்படுவது அல்லவா?
தடைகள்
எங்களை பொறுத்தவரை, இதுபோன்ற எத்தனையோ தடைகளை உடைத்து எழுந்து வந்தவர்கள்.
பாசிசத்தை, எதேச்சாதிகாரத்தை, இந்தியாவில் நெஞ்சுயர்த்தி எதிர்கொண்டு இருக்கும் நாம், இதுபோன்ற சிறுபிள்ளை விளையாட்டு செயல்களை பார்த்து, பயந்து விட மாட்டோம்.
இவ்வாறு முதல்வர் பேசினார்.