ADDED : நவ 25, 2026 09:51 PM

த.வெ.க., – எம்.எல்.ஏ., மீதான வழக்கை விசாரிக்க, விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்ட திருப்பூர் எஸ்.பி., ஸ்ருஷ்டி சிங், இன்று (நவ.,25) கள்ளக்குறிச்சியில் முகாமிட்டு விசாரணையை துவக்கினார்.
மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் புவனேஷ்வரி, நேற்று காலை, கள்ளக்குறிச்சி கச்சிராயப்பாளையம் சாலையில் உள்ள அருள் விக்னேஷ் வீட்டிற்கு சென்று, விசாரணைக்கு ஆஜராகுமாறு சம்மன் வழங்கினார்.
சம்மனில், ‘விசாரணை முடியும் வரை வீட்டை விட்டு வெளியே செல்லக்கூடாது. எந்த நேரத்தில் அழைத்தாலும் விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்’ என, கூறப்பட்டுள்ளது. இதையடுத்து, வழக்கறிஞர்களை வீட்டிற்கு வரவழைத்து, எம்.எல்.ஏ., ஆலோசனை நடத்தினார்; வீட்டிற்குள் முடங்கி உள்ளார்.
இந்நிலையல், எஸ்.பி., ஸ்ருஷ்டி சிங், இன்று காலை கள்ளக்குறிச்சி மகளிர் போலீஸ் ஸ்டேஷனில், 5 மணி நேரம் ஆலோசனை நடத்தினார். தொடர்ந்து, கலெக்டரின் முகாம் அலுவலகம் சென்று, அவரிடம் ஒரு மணி நேரம் எஸ்.பி., ஸ்ருஷ்டி சிங் விசாரணை நடத்தினார்.
