புயலால் கொட்டியது மழை; 20 அடியை எட்டியது செம்பரம்பாக்கம் ஏரி!
புயலால் கொட்டியது மழை; 20 அடியை எட்டியது செம்பரம்பாக்கம் ஏரி!
ADDED : டிச 01, 2024 07:06 AM

சென்னை: பெஞ்சல் புயல் தாக்கம் காரணமாக, மொத்தம் 24 அடி கொண்ட செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டம் 20 அடியாக உள்ளது.
வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுப்பெற்றது. இதற்கு பெஞ்சல் என பெயர் சூட்டப்பட்டது. நேற்று மாலை 5: 30 கரையை கடக்க துவங்கிய புயல், இன்று (டிச.,01) அதிகாலை 1 மணியளவில் புதுச்சேரி அருகே முழுமையாக கரை கடந்தது. புயல் மற்றும் மழையால், கடலுார் முதல் சென்னை வரை மக்களின் அன்றாட வாழ்க்கை ஸ்தம்பித்தது. சென்னையில் மழை வெள்ளம் சூழ்ந்ததால், வீதிகள் வெள்ளக்காடாக மாறின; பஸ், ரயில் போக்குவரத்து முடங்கியது.
குறிப்பாக செம்பரம்பாக்கம் ஏரிக்கு வரும் நீரின் வரத்து அதிகரித்தது. புயல் தாக்கம் காரணமாக, மொத்தம் 24 அடி கொண்ட செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டம் 20 அடியாக உள்ளது. அதன் விபரம் பின்வருமாறு:
மொத்த உயரம்:24 அடி
மொத்த கொள்ளளவு: 3645 மில்லியன் கன அடி
தற்போதைய நீர்மட்டம்: 20 அடி
நீர் இருப்பு: 2,621 மில்லியன் கன அடி
நீர்வரத்து: வினாடிக்கு 4,217 கன அடி
மழையளவு: 13 செ.மீ.,

