UPDATED : அக் 20, 2026 12:00 AM
ADDED : அக் 19, 2026 07:36 PM

பற்றி எரிகிறது பாரிஸ் ‘ஜாகிங்’ சென்ற பெண்
பி ரான்ஸ் நாட்டில் வன்முறை வெடித்துள்ளது; ஊரே பற்றி எரிகிறது; கும்பல் கும்பலாக புகுந்து கடைகளை கொள்ளையடிப்பது தொடர்ந்து கொண்டிருக்கிறது. அமைதியற்ற அந்த சூழலிலும், பாரிஸ் நகரில் பெண் ஒருவர் ‘ஜாகிங்’ சென்ற காட்சி, வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. வீதியின் நடுவில் வன்முறை கும்பல் வைத்த தீ எரிந்து கொண்டிருக்கும் நிலையில், அது பற்றிய கவலையோ, பயமோ இல்லாமல் ‘ஜாகிங்’ செல்கிறார் அந்த பெண். விளையாட்டு வீராங்கனைக்கான உடையில், சீரான ஓட்டத்தில், வன்முறை கூட்டத்தில் புகுந்து செல்லும் அந்த பெண்ணின் வீடியோவை பார்த்து வலைதளவாசிகள், சரமாரியாக கமென்ட் செய்து வருகின்றனர். ‘அவரால் வன்முறையை கட்டுப்படுத்த முடியாது; ஆனால் உடலை கட்டுப்படுத்த முடியும்’ என்கிறார், ஒருவர். ‘நம் வேலையை மட்டும் நாம் பார்ப்பது என்பது இதுதான். எல்லோரும் இதை செய்தால் உலகம் சிறக்கும்’ என்கிறார், ஒருவர்.
பல் டாக்டரை காட்டிலும்
பயிற்சியாளருக்கு அதிக வருவாய்
க டந்த, 12 ஆண்டுக்கு முன் துபாய்க்கு பல் டாக்டராக சென்றார், இந்திய பெண் மோனிகா சிங். அங்கு பல் டாக்டராக வேலை பார்த்தபடியே, நடனத்துடன் கூடிய பிட்னெஸ் பயிற்சிக்கு சென்றார். பயிற்சி அவருக்கு பிடித்து போனது. உற்சாகமாக பயிற்சி செய்தவர், தானும் அதே போன்ற பயிற்சி வகுப்பை தொடங்க முடிவெடுத்தார்.
அந்த முடிவு, அவரது வாழ்க்கையை மாற்றி விட்டது. டான்ஸ் பிட்னெஸ் பயிற்சிக்கு கிடைத்த அமோக வரவேற்பால், பல் டாக்டர் வேலையை பகுதி நேரமாக்கி, டான்ஸ் பிட்னெஸ் பயிற்சியை முழு நேரமாக்கி விட்டார். இப்போது அவரது மாத வருமானம், 10 லட்சம் முதல் 12 லட்சம் ரூபாய் என்கிறார், மோனிகா சிங்.
இணையத்தை கலக்கும் ஜப்பானியர் ‘டான்ஸ் மாமா’வுக்கு வயது 60
ஜ ப்பானை சேர்ந்த டோரு உசுமிக்கு வயது, 60. நிர்வாகவியல் ஆலோசகராக பணியாற்றுகிறார். நம்ம ஊர் பெண்கள் பலரை போலவே, டான்ஸ் வீடியோவை வலைதளங்களில் பதிவிடுவதுதான் உசுமிக்கு பிடித்தமான வேலை. வார விடுமுறை நாள் வந்து விட்டால் போதும், அட்டகாச டான்ஸ் வீடியோக்களை அப்லோடு செய்து விடுவார்.
அவரது வீடியோக்கள் இயல்பானவை; பில்டர் எதுவும் இல்லாதவை. மக்கள் அதிகம் கூடும் இடங்களிலும், ஒழுக்கம், கட்டுப்பாட்டுக்கு முன்னுரிமை அளிக்கும் இடங்களில் மட்டுமே நடனம் ஆடுகிறார். ‘இப்படி செய்தால் நான் தனித்து தெரிவேன் என்று எனக்குத் தெரியும்’ என்று கூறிவிட்டுத்தான் இப்படி செய்கிறார் உசுமி.
ஒழுக்கம் மிகுந்த ஜப்பானிய சமூகத்தில், உசுமியின் இத்தகைய கட்டுப்பாடற்ற செயலை பலரும் விமர்சிக்கின்றனர். எனினும், அவரது ரசிகர் பட்டாளம் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது.
வேடிக்கை பார்த்த குழந்தைகள்
காரில் பயணித்த மகிழ்ச்சி தருணம்
ஹை தராபாதில் நடந்த சம்பவம், அது. லம்போர்கினி சொகுசு கார் ஷோரூம் முன் நின்றிருந்த பள்ளிக்குழந்தைகள் இருவர், அந்த கார்களை ஆர்வத்துடன் பார்த்துக் கொண்டிருந்தனர். நீண்ட நேரம் குழந்தைகள் இருவரும் காரை ஆர்வத்துடன் பார்ப்பதை கவனித்தார், ஷோரூம் உரிமையாளரான நிஷாந்த் சாபூ.
குழந்தைகளை ஷோரூமுக்குள் அழைத்து வந்த அவர், கார்களை அருகில் இருந்து பார்க்கும்படி கூறினார். கார்களுக்கு பக்கத்தில் குழந்தைகள் நிற்பதை போல படமும் எடுத்தார். யஷ்விகா, விஹான் என்ற அந்த குழந்தைகள் இருவரையும் லம்போர்கினி காரில் உட்கார வைத்து ஒரு ரவுண்ட் ஓட்டியும் காண்பித்தார். ‘அந்த குழந்தைகளின் முகத்திலும், அவர்களது தந்தையின் முகத்திலும் தெரிந்த மகிழ்ச்சி விலை மதிப்பற்றது’ என்று நிஷாந்த் பதிவிட்டார். அவரை வலைதள பிரியர்கள் பலரும் பாராட்டி புகழ்ந்து வருகின்றனர்.
அம்பானிகளுடன் தோனி நவராத்திரி கொண்டாட்டம்
இ ந்திய கிரிக்கெட் அணி முன்னாள் கேப்டன் தோனி, தன் மனைவி சாக் ஷியுடன் குஜராத் ஜாம்நகரில் நடந்த அம்பானி குடும்பத்தினரின் நவராத்திரி விழாவில் பங்கேற்றார். ஆனந்த் அம்பானி, ராதிகா மெர்ச்சென்ட் இருவரும் விழாவில் கலந்து கொண்டனர். மேலும் கீழும் சென்று வரும் கொலம்பஸ் ரைடரில் உற்சாகமாக ஆடிய தோனி, ராட்டினத்தில் ஆனந்த் அம்பானி சுற்றியதை பார்த்து ரசித்தார். தோனியின் நவராத்திரி கொண்டாட்ட வீடியோக்கள் வலைதளங்களில் பரவி வருகின்றன.
