ADDED : அக் 19, 2024 07:28 PM
தமிழக கவர்னர் ரவியின் பழக்க வழக்கமே எப்போதுமே ஏட்டிக்கு போட்டியாக நடந்து கொள்வது தான். திராவிடம் என்ற சொல் அவருக்கு வேப்பங்காயாக கசக்கிறது. 1962ம் ஆண்டு இந்தியாவுக்கும் சீனாவிற்கும் யுத்தம் வந்த கால கட்டத்தில் தான், திராவிட நாடு திராவிடருக்கு என்ற கொள்கையோடு ஒரு கட்சி துவங்கப்பட்டது. அந்த கட்சி தி.மு.க.,
இந்தியாவின் ஒற்றுமையை வலியுறுத்தி அப்போது தீர்மானம் நிறைவேற்றியது தி.மு.க.,வின் அண்ணாதுரையும், கருணாநிதியும் தான். இன்றளவிலும் இந்திய ஒற்றுமையை வலியுறுத்தி வரும் இயக்கம் தி.மு.க.,
தேர்தல் அறிக்கையில் சொன்ன திட்டங்கள் அனைத்தையும் நிறைவேற்றி இருக்கிறது தி.மு.க., அரசு. மக்கள் மனம் கவரும் அளவுக்கு பல்வேறு திட்டங்கள், கடந்த நான் கு ஆண்டுகளாக தி.மு.க., அரசால் நிறைவேற்றப்பட்டுள்ளன. மக்கள் மகிழ்கின்றனர். ஆனால், எதிர்கட்சியினர் வயிறு எரிகின்றனர்.
ரகுபதி, தமிழக சட்ட அமைச்சர்