ADDED : அக் 23, 2024 10:58 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆட்சிக்கு வந்து மூன்றரை ஆண்டுகளைக் கடந்தும் தி.மு.க., அரசு பணி நிரந்தரம் செய்ய மறுப்பது, பகுதி நேர ஆசிரியர் பெருமக்களுக்குச் செய்கின்ற பெரும் துரோகமாகும்.
தற்போது கிடைக்கின்ற 12,500 ரூபாய் ஊதியத்தால் பெரும் பொருளாதார நெருக்கடியில் பகுதிநேர ஆசிரியர்கள் சிக்கித்தவித்து வருகின்றார்கள். ஆகவே, 13 ஆண்டுகளாகப் பணி நிரந்தரம் கேட்டு போராடி வரும் 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பகுதிநேர ஆசிரியர்களின் கோரிக்கையை தமிழக அரசு உடனடியாக நிறைவேற்ற வேண்டும். நவம்பர் மாத ஊதியம் மற்றும் விழாக் கால ஊக்கத் தொகையை தீபாவளிக்கு முன்பே வழங்க வேண்டும். இதர ஊழியர்களைப் போல அவர்களுக்கும் எல்லா உரிமைகளும் கிடைக்கச் செய்ய வேண்டும்.
சீமான், தலைமை ஒருங்கிணைப்பாளர், நாம் தமிழர்