திருட்டுகளும், உருட்டுகளும் இப்ப அதிமுக, அடுத்து திமுக; சீமான் சொன்னது இதுதான்!
திருட்டுகளும், உருட்டுகளும் இப்ப அதிமுக, அடுத்து திமுக; சீமான் சொன்னது இதுதான்!
ADDED : ஜூலை 26, 2025 06:37 PM

சென்னை: திருட்டுகளும் உருட்டுகளும் இப்ப அதிமுக, அடுத்து திமுக என இபிஎஸ் பிரசாரம் குறித்து நிருபர்கள் எழுப்பிய கேள்விக்கு நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் பதில் அளித்தார்.
சென்னையில் நிருபர்கள் சந்திப்பில் சீமான் கூறியதாவது: பிரதமர் மோடி தமிழகத்திற்கு இரண்டு நாட்கள் வருவது ஒரு வருகை. அது அவ்வளவுதான், நான் அதில் எண்ணத்தை பார்க்க, அதிகாரத்தில் இருந்தா வெள்ளைக்கொடி காட்டுவார்கள், எதிர்க்கட்சியாக இருந்தால் கருப்புக்கொடி காட்டுவார்கள். இவ்வாறு சீமான் கூறினார்.
கேள்விகளும், பதிலும்!
நிருபர்; நாம் தமிழர் கட்சி வேட்பாளர் பட்டியல் எப்போது வெளியிடப்படும்?
சீமான் பதில்: அவசரம் அவசரம், மாநாடு நடத்தி நாம் தமிழர் கட்சி வேட்பாளர் பட்டியலை வெளியிடுகிறேன். காத்திருங்கள்.
நிருபர்: திமுகவின் திருட்டுகளும், உருட்டுக்களும் என அதிமுக பொதுச்செயலாளர் இ.பி.எஸ்., பிரசாரத்தை தொடங்கி இருக்கிறார்?
சீமான் பதில்; இது கொஞ்சம் முடிந்த பிறகு அவங்க வந்து அதிமுகவின் திருட்டுகளும், உருட்டுகளும் என ஆரம்பிப்பார்கள். மக்கள் இருட்டில் நின்று முழித்துக் கொண்டிருப்பார்கள்.இந்த உருட்டு தான் 60 வருடமாக நடக்கிறது. இவர்கள் அவர்களை சொல்வார்கள். அவர்கள் இவர்களை சொல்வார்கள்.

