கம்யூனிஸ்ட் கட்சியினர் மீது ஊழல் வழக்குகளே இல்லை
கம்யூனிஸ்ட் கட்சியினர் மீது ஊழல் வழக்குகளே இல்லை
ADDED : டிச 29, 2025 06:05 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
இந்தியாவில் உள்ள 86,000 நீதிமன்றங்களில் கம்யூனிஸ்ட் கட்சியினர் மீது எந்த ஊழல் வழக்கும் இல்லை. ஆட்சி அதிகாரத்திற்கு வராமல், 100 ஆண்டுகள் ஆனாலும், வாழும் கட்சியாக இந்திய கம்யூனிஸ்ட் உள்ளது. ஆர்.எஸ்.எஸ்., கொள்கையை மட்டுமே எதிர்க்கிறோம். மற்ற கட்சிகளை வரவேற்கிறோம். பீஹார், ஒடிஷா தேர்தலில் தமிழக மக்களுக்கு விரோதமாக மோடியும், அமித் ஷாவும் பேசியதற்கு, அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி பதில் சொல்ல வேண்டும்.
ஹிந்துக்கள் மத வெறியர்கள் அல்ல; மிகுந்த இறை நம்பிக்கை கொண்டவர்கள். சிறுபான்மை மக்களும் நம்முடையவர்கள், அவர்களை பாதுகாக்க வேண்டியது கடமை என எண்ணுபவர்கள். இது ஆர்.எஸ்.எஸ்.,சுக்கு பிடிக்கவில்லை. தி.மு,க.,வை பார்த்து தீய சக்தி என விஜய் பேசுகிறார். தி.மு.க., ஒரு ஜனநாயக சக்தி. தமிழகத்தில் மோடியே கூட்டணிக்கு தலைமையேற்றாலும், வெல்லப்போவது தி.மு.க., கூட்டணி தான்.
-- வீரபாண்டியன் , மாநில செயலர், இ.கம்யூ.,

