எனது வீட்டில் ஒட்டு கேட்கும் கருவி; ராமதாஸ் பகீர் குற்றச்சாட்டு
எனது வீட்டில் ஒட்டு கேட்கும் கருவி; ராமதாஸ் பகீர் குற்றச்சாட்டு
UPDATED : ஜூலை 11, 2025 06:13 PM
ADDED : ஜூலை 11, 2025 02:05 PM

சென்னை: ''லண்டனில் இருந்து வரவழைக்கப்பட்ட ஒட்டு கேட்கும் கருவி எனது வீட்டில் ரகசியமாக மறைத்து வைக்கப்பட்டிருந்தது. நேற்று முன்தினம் தான் கண்டுபிடித்தோம்'' என பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் நிருபர்கள் சந்திப்பில் தெரிவித்தார்.
இது குறித்து நிருபர்கள் சந்திப்பில் ராமதாஸ் கூறியதாவது: எனது வீட்டில் ஒட்டு கேட்கும் கருவி. எனது வீட்டிலேயே, நான் உட்காரும் இடத்தில், எனது நாற்காலியின் பக்கத்தில் ஒட்டு கேட்கும் கருவி இருக்கிறது. யார் வைத்தார்கள், எதற்காக வைத்தார்கள் என்பது பற்றி ஆராய்ச்சி பண்ணி கொண்டு இருக்கிறோம்.
அந்த ஒட்டு கேட்கும் கருவி வெளிநாட்டு கருவி. அது லண்டனில் இருந்து வந்தது. அதனை கண்டுபிடித்து எடுத்து பார்த்தோம். லண்டனில் இருந்து வந்து இருக்கிறது. அது சாதாரண விலை கிடையாது. அதிகமான விலை உள்ள ஒரு கருவி. இவ்வாறு ராமதாஸ் கூறினார்.