ADDED : டிச 14, 2024 06:56 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை: தமிழக அரசு, பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, 2.21 கோடி அரிசி கார்டுதாரர்களுக்கு, பொங்கல் பரிசு தொகுப்பு வழங்குகிறது.
வரும் ஜனவரி, 14ம் தேதி பொங்கல் கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு, ரேஷன் கார்டுதாரர்களுக்கு தலா ஒரு கிலோ பச்சரிசி, சர்க்கரை, முழு கரும்பு, 1,000 ரூபாய் ரொக்கம் அடங்கிய பரிசு தொகுப்பு வழங்க, அரசு முடிவு செய்துள்ளது.
இதற்காக, கார்டுதாரர்கள், செலவு உள்ளிட்ட கணக்கெடுப்பு நடந்து வருகிறது. அதன் அடிப்படையில் நிதி ஒதுக்கப்பட்டு, விரைவில் அரசு அறிவிப்பு வெளியிடும் என, எதிர்பார்க்கப்படுகிறது.