sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, மார்ச் 29, 2026 ,பங்குனி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

வெளிநாட்டிலிருந்து வருவோர் நகை அணிந்து வந்தால் சுங்க வரி உண்டு

/

வெளிநாட்டிலிருந்து வருவோர் நகை அணிந்து வந்தால் சுங்க வரி உண்டு

வெளிநாட்டிலிருந்து வருவோர் நகை அணிந்து வந்தால் சுங்க வரி உண்டு

வெளிநாட்டிலிருந்து வருவோர் நகை அணிந்து வந்தால் சுங்க வரி உண்டு

21


ADDED : பிப் 16, 2025 05:33 AM

Google News

ADDED : பிப் 16, 2025 05:33 AM

21


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: 'உடலில் அணிந்து வரும் நகைகளை, சுங்க வரி விதிக்கும் வகையில், உடைமைகளாக கருத முடியாது' என்ற தனி நீதிபதியின் உத்தரவுக்கு, சென்னை உயர் நீதிமன்ற இரு நீதிபதிகள் அமர்வு தடை விதித்துள்ளது.

சென்னையைச் சேர்ந்த சபீனா முகமது மொய்தீன், இலங்கையைச் சேர்ந்த தனுஷிகா ஆகியோர், 2023ல் வெளிநாடு சென்று விட்டு சென்னை திரும்பினர். அவர்களை, சென்னை விமான நிலையத்தில் சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர்.

நடவடிக்கை


சபீனா அணிந்திருந்த, 135 கிராம் எடையுள்ள, 10 தங்க வளையல்கள், தனுஷிகா அணிந்திருந்த, 88 கிராம் தாலிச் செயின் போன்றவற்றை, சுங்கத்துறையினர் பறிமுதல் செய்தனர்.

சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்த தங்க நகைகளை திருப்பி தரக்கோரி, சபீனா, தனுஷிகா உள்ளிட்டோர் வழக்கு தொடர்ந்தனர்.

வழக்குகளை விசாரித்த நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி, 'தங்க நகைகளை மறைத்து எடுத்து வரவில்லை; அணிந்து தான் வந்துள்ளனர். உடலில் அணிந்திருக்கும் நகைகளை உடைமைகளாக கருதி, சுங்க வரி விதிக்க முடியாது. அவற்றை திருப்பி ஒப்படைக்க வேண்டும்.

'கலாசாரம், ஹிந்து மத நடைமுறைகளை சிதைக்கும் வகையில், பெண்ணின் தாலிக்கொடியை பறித்தது சகித்துக் கொள்ள முடியாது' என, உத்தரவிட்டிருந்தார். மேலும், சுங்கத்துறை அதிகாரிகள் மீது துறை ரீதியான நடவடிக்கைக்கும் உத்தரவிட்டிருந்தார்.

ரூ.50,000


இதை எதிர்த்து, சுங்கத்துறை சார்பில் தாக்கல் செய்த மேல்முறையீடு வழக்கு, நீதிபதிகள் எஸ்.எஸ்.சுந்தர், சி.சரவணன் அடங்கிய அமர்வில், நேற்று முன்தினம் விசாரணைக்கு வந்தது.

சுங்கத்துறை தரப்பில் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஏ.ஆர்.எல்.சுந்தரேசன் ஆஜராகி, ''பேக்கேஜ் விதிகளின்படி, 50,000 ரூபாய் மதிப்புக்கு மேல் கொண்டு வரப்படும் பொருட்கள், உடைமைகளாகக் கருதப்பட்டு வரி வசூலிக்கப்பட வேண்டும்.

''உடலில் அணிந்துள்ள நகைகளை உடைமைகளாகக் கருத முடியாது என்ற உத்தரவை ஏற்றால், அது நாட்டின் பொருளாதாரத்தில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். தனி நீதிபதி உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும்,'' என்றார்.

சுங்கத்துறை தரப்பு வாதத்தை ஏற்ற நீதிபதிகள், இவ்வழக்கில் தனி நீதிபதி உத்தரவுக்கு தடை விதித்தனர். பறிமுதல் செய்யப்பட்ட தங்க நகைகளை, பிணை அல்லது உத்தரவாதம் பெற்று திரும்ப வழங்க வேண்டும் என்றும் உத்தரவிட்டனர்.






      Dinamalar
      Follow us