40 'சீட்' கேட்கும் அளவுக்கு அரசியல் தார்மீகம் உள்ளது
40 'சீட்' கேட்கும் அளவுக்கு அரசியல் தார்மீகம் உள்ளது
ADDED : டிச 20, 2025 07:11 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நுாறு நாள் வேலை திட்டத்தில் பணி நாட்கள் அதிகரித்துள்ளதை வரவேற்கிறோம். அதே நேரம், அதற்குரிய நிதியை ஒதுக்கி, உழைப்புக்கேற்ற ஊதியம் அதிகரிக்க வேண்டும். பொங்கல் தொகுப்புடன் கட்டாயமாக பணமும் தமிழக அரசு வழங்க வேண்டும். நிதி நிலை ஒத்துழைத்தால், எவ்வளவு வேண்டுமானாலும் தரலாம். தி.மு.க., கூட்டணியில், 30 - 40 'சீட்' வரை கேட்க, இ.கம்யூ., கட்சிக்கு அரசியல் தார்மீகம் மற்றும் 100 ஆண்டு கால அரசியல் எங்களுக்கு உள்ளது. எத்தனை சீட் கேட்டாலும், ஜனநாயக விரோதமாக எங்கள் கூட்டணி தலைவர் எடுத்துக்கொள்ள மாட்டார். வரும் 26ம் தேதி, இ.கம்யூ., கட்சியின் நுாற்றாண்டு மற்றும் மூத்த தலைவர் நல்லகண்ணு நுாற்றாண்டு நிகழ்ச்சியும் நடக்கிறது.
- வீரபாண்டியன்
மாநில செயலர், இந்திய கம்யூனிஸ்ட்

