sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, மார்ச் 28, 2026 ,பங்குனி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

திமுக கூட்டணிக்கு ஈடுகொடுக்க மாற்று கூட்டணி இல்லை; திருமா

/

திமுக கூட்டணிக்கு ஈடுகொடுக்க மாற்று கூட்டணி இல்லை; திருமா

திமுக கூட்டணிக்கு ஈடுகொடுக்க மாற்று கூட்டணி இல்லை; திருமா

திமுக கூட்டணிக்கு ஈடுகொடுக்க மாற்று கூட்டணி இல்லை; திருமா

34


UPDATED : மார் 07, 2026 02:46 PM

ADDED : மார் 07, 2026 02:42 PM

Google News

34

UPDATED : மார் 07, 2026 02:46 PM ADDED : மார் 07, 2026 02:42 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: திமுக தலைமையிலான கூட்டணிக்கு ஈடு கொடுக்கும் வகையில் மாற்று கூட்டணி உருவாகவில்லை என சென்னை விமான நிலையத்தில் நிருபர்கள் சந்திப்பில் விடுதலை சிறுத்தைக்கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்தார்.

அவர் கூறியதாவது: திமுக குழுவினர் ஒவ்வொரு கட்சியாக அழைத்து பேசி கொண்டு இருக்கிறார்கள். எங்களையும் விரைவில் அழைப்பார்கள். கூட்டணி கட்சிகளிடையே சுமுகமான முறையில் போய் கொண்டு இருக்கின்றன. எதிர்க்கட்சிகள் அதிர்ச்சி அடையும் அளவுக்கு திமுக கூட்டணி கட்டுகோப்பாக இருக்கிறது. இதனால் புதிய பல கட்சிகள் இணைந்து இந்த கூட்டணியை வலிமைப்படுத்தி கொண்டு இருக்கின்றன.

திமுக தலைமையிலான கூட்டணிக்கு ஈடு கொடுக்கும் வகையில், தமிழகத்தில் மாற்று கூட்டணி இதுவரை உருவாகவில்லை. தமிழக மக்களின் ஆதரவோடு இந்த கூட்டணி வரும் தேர்தலில் மகத்தான வெற்றியை பெறும். விஜய் புகழ்பெற்ற நடிகர் என்பதால், ஊடகங்கள் அவருக்கு கூடுதலான முக்கியத்துவத்தை தந்து கொண்டு இருக்கின்றன.

அவரால் தமிழக அரசியல் தலை கீழாக மாற போகிறது என்ற தோற்றத்தை திட்டமிட்டே உருவாக்கி கொண்டு இருக்கிறார்கள். தமிழக மக்கள் பிற மாநில மக்களை விட அரசியல் விழிப்புணர்வு உள்ளவர்கள். ஆகவே கடந்த காலங்களில் சினிமா என்கிற ஒரு மயக்கத்தில் தமிழக மக்கள் ஓட்டளித்தது போல, தற்போதை சுழலில் அப்படி ஓட்டளிக்க வாய்ப்பு இல்லை. இவ்வாறு திருமாவளவன் கூறினார்.






      Dinamalar
      Follow us