தூய்மைப்பணியை தனியாருக்கு வழங்க தடை இல்லை; ஐகோர்ட் உத்தரவு
தூய்மைப்பணியை தனியாருக்கு வழங்க தடை இல்லை; ஐகோர்ட் உத்தரவு
UPDATED : ஆக 20, 2025 11:30 AM
ADDED : ஆக 20, 2025 11:21 AM

சென்னை: ''தூய்மைப் பணியை தனியாருக்குத் தர தடை இல்லை' என சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
தூய்மை பணிகளை தனியாருக்கு வழங்கும் சென்னை மாநகராட்சி தீர்மானத்தை ரத்து செய்யக்கோரிய ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு இன்று (ஆகஸ்ட் 20) விசாரணைக்கு வந்தது. அப்போது ஐகோர்ட் நீதிபதி சுரேந்தர் கூறியதாவது:
* பணியாளர்கள் பணி நீக்கம் செய்யப்படுவார்கள் என்ற நிலை எழவில்லை என்பதால் தூய்மைப் பணியைத் தனியார் வசம் ஒப்படைக்கத் தடை இல்லை.
* சென்னை மாநகராட்சி, அரசு கலந்து பேசி பணியாளர்கள் கடைசியாகப் பெற்ற ஊதியத்தைத் தர வேண்டும்.
* தூய்மை பணியை தனியாருக்கு வழங்க மாநகராட்சி நிறைவேற்றிய தீர்மானத்தை ரத்து செய்ய முடியாது.
* சென்னை மாநகராட்சியில் இரண்டு மண்டலங்களில் தூய்மைப் பணிகளை தனியாருக்கு வழங்க தடை விதிக்க முடியாது என கூறி, வழக்கை முடித்து வைத்து நீதிபதி உத்தரவிட்டார்.