உள்ளடக்கத்திற்கு செல்ல

ADDED : ஜூன் 24, 2026 05:35 AM

அ நிறம் | அளவு
மேகதாதுவில் அணை கட்ட முயலும் கர்நாடக அரசின் செயலை எதிர்ப்பதாகக் கூறி, நடுவர் மன்றம் அமைக்க கோரும், தமிழக வெற்றிக் கழக அரசின் போக்கு தவறான முடிவு. இதை, தி.மு.க.,வும் ஆதரித்ததன் வாயிலாக, இரு கட்சிகளுக்குமே, காவிரி நதி நீர் பிரச்னையில் அடிப்படை புரிதல் இல்லை என்பதை காட்டுகிறது.
காவிரி கீழ்ப்பாசன மாநிலங்களின் ஒப்புதல் இல்லாமல், மேல் பாசன மாநிலங்கள் அணை உள்ளிட்ட கட்டுமானப் பணிகள் மேற்கொள்ளக் கூடாது. இதை உச்ச நீதிமன்ற தீர்ப்பு மற்றும் காவிரி மேலாண்மை ஆணைய வழிகாட்டுதல்கள் உறுதி செய்கின்றன.
தமிழக அரசின் அனுமதியின்றி, மேகதாதுவில் அணை கட்ட முயற்சிப்பது, ஏற்கனவே இருக்கும் விதிகளின் படியே, சட்ட விரோதம். ஒருவேளை, புதிதாக கோரும் அந்த நடுவர் மன்றத்தின் தீர்ப்பு, மேகதாது அணை கட்ட ஒப்புதல் வழங்கினால், சட்டப்பூர்வமாக இருக்கும் கடைசி வாய்ப்பையும் தமிழகம் இழக்க நேரிடும்.
- சீமான், தலைமை ஒருங்கிணைப்பாளர், நாம் தமிழர் கட்சி
