sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, மார்ச் 27, 2026 ,பங்குனி 13, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

தே.ஜ., கூட்டணிக்கு போட்டியே இல்லை; நயினார் நாகேந்திரன் கருத்து

/

தே.ஜ., கூட்டணிக்கு போட்டியே இல்லை; நயினார் நாகேந்திரன் கருத்து

தே.ஜ., கூட்டணிக்கு போட்டியே இல்லை; நயினார் நாகேந்திரன் கருத்து

தே.ஜ., கூட்டணிக்கு போட்டியே இல்லை; நயினார் நாகேந்திரன் கருத்து

6


ADDED : மார் 15, 2026 08:59 PM

Google News

6

ADDED : மார் 15, 2026 08:59 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: 'தமிழகத்தில் தே.ஜ., கூட்டணிக்கு போட்டியே இல்லை' என, தமிழக பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.

சென்னையில் அவர் அளித்த பேட்டி: தமிழக மக்களின் மனநிலையை, முதல்வர் ஸ்டாலின் மறைத்து, தனக்கு சாதகமானதை மட்டும்தான் பேசுவார். அப்படிதான், பெண்கள் ஓட்டு தி.மு.க.,வுக்கு இருக்கிறது என சொல்கிறார். இரண்டு வயது குழந்தை முதல் 60 வயது பெண்கள் வரை, வன்கொடுமை நடக்கிறது. சட்டம் - ஒழுங்கை முதல்வர் சரியாக கவனிக்காததே இதற்கு காரணம். பின்பு, எப்படி பெண்கள் ஓட்டு தி.மு.க.,வுக்கு கிடைக்கும்.

சொத்து வரி உயர்வு, மின்சார கட்டணம் 300 மடங்கு அதிகரித்து இருப்பதால், எந்தத் தொழிலும் நடப்பதில்லை. காற்றாலையில் பெயர் மாற்றத்துக்கே, 20 லட்சம் ரூபாய் லஞ்சம் வாக்குகின்றனர். மின்சாரத் துறைக்கு அமைச்சர் ஒருவராக இருந்தாலும், பினாமி அமைச்சராக இன்னொருவர் செயல்படுகிறார்.

எல்லாமே மக்களுக்கும் தெரியும். அதனால், தமிழகத்தில் தே.ஜ., கூட்டணிதான் வெற்றி பெறும். மொத்தத்தில் தே.ஜ., கூட்டணிக்கு போட்டியே இல்லை. நடிகர் விஜயுடன் கூட்டணி இல்லை என, பழனிசாமி தெளிவாக கூறிவிட்டார். ஆனால், டில்லியில் என்ன நடக்கிறது என எனக்கு எதுவும் தெரியாது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.






      Dinamalar
      Follow us