வெறும் மாஸ் காட்டி பிரயோஜனம் இல்லை: விஜய் பற்றி நயினார் விமர்சனம்
வெறும் மாஸ் காட்டி பிரயோஜனம் இல்லை: விஜய் பற்றி நயினார் விமர்சனம்
ADDED : டிச 18, 2025 05:42 PM

வேலுார்: தவெக தலைவர் விஜய் வெறும் மாஸ் காட்டி பிரயோஜனம் இல்லை என்று தமிழக பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன் விமர்சித்துள்ளார்.
ஈரோட்டில் இன்று தவெக தலைவர் விஜய் பேசுகையில்,
மக்கள் எல்லாத்தையும் உன்னிப்பாக கவனித்து கொண்டு இருக்கிறார்கள். அதனால் தான் சொல்கிறேன். உங்களுக்கு நீங்கள் கொள்ளையடித்து வைத்திருக்கும் காசு தான் துணை; எனக்கு என் மீது எல்லையில்லா அன்பு வைத்திருக்கும் 'மாஸ்' (மக்கள்) தான் துணை. நமக்கு துணையாக இருக்கும் ஈரோடு மக்களுக்காக குரல் கொடுக்க வந்து இருக்கிறேன் என்று பேசியிருந்தார்.
இதற்கு பதிலளித்து வேலுாரில் நயினார் நாகேந்திரன் அளித்த பேட்டி:பொதுவெளியில் பேசும் போது அனைவரும் நாகரிகமாக பேச வேண்டும். தவெக தலைவர் விஜய் வெறும் மாஸ் காட்டி பிரயோஜனம் இல்லை.
திமுகவினர் பாஜவின் 'B' டீம் என்று தவெக தலைவர் விஜயை கூறுகின்றனர் என்று செய்தியாளர் கேட்ட கேள்விக்கு,
ஒரு பொய்யை திரும்ப, திரும்ப சொல்லுவதால் அது அப்படியே நடந்துவிடும் கோயபல்ஸ் தத்துவத்தை பரப்புவதிலும் வதந்தியை பரப்புவதிலும் திமுகவினர் வல்லவர்கள். அவர்கள் அப்படித்தான் பரப்புவர்.
செங்கோட்டையன் தவெகவில் சேருவதற்கு முன் அமைச்சர் சேகர் பாபுவை சந்தித்துவிட்டுதான் அங்கு போனார். அப்படி பார்த்தால் அவர்கள் திமுகவின் 'B' டீமா, இல்லை பாஜவின் 'B' டீமா என்று மக்கள் தான் முடிவு செய்வார்கள்.
இவ்வாறு நயினார் நாகேந்திரன் கூறினார்.

