பெண்களுக்கு பாதுகாப்பும் கிடையாது; குற்றவாளிகளுக்கு தண்டனையும் கிடையாது * வானதி குற்றச்சாட்டு
பெண்களுக்கு பாதுகாப்பும் கிடையாது; குற்றவாளிகளுக்கு தண்டனையும் கிடையாது * வானதி குற்றச்சாட்டு
ADDED : ஜன 31, 2025 08:07 PM
சென்னை:'தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பும் கிடையாது, உண்யைான பாலியல் குற்றவாளிகளுக்கு தண்டனையும் கிடைக்காது. நீதி கேட்டு போராடும் பெண்களுக்கு அனுமதியும் கிடையாது' என, பா.ஜ., தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் கூறியுள்ளார்.
அவரது அறிக்கை:
தங்கள் கட்சியினரால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு பகிரங்க மிரட்டல் விடுக்கிறதா தி.மு.க., அரசு? தங்களுக்கு நடந்த பாலியல் வன்கொடுமைகள் பற்றியும், தங்களை தாக்கும் நோக்கில் துரத்திய போதை ஆசாமிகள் பற்றியும், புகார் கொடுத்த பெண்களின் மொத்த விபரங்களையும், உடனே பொது வெளியில் கசிய விடுவது எதை உணர்த்துவதற்காக?
அந்த குற்றங்களில் ஈடுபட்டவர்கள் தி.மு.க.,வை சார்ந்தவர்கள் என்பதால், புகார் அளித்த பெண்களை பழி வாங்குகிறாரா முதல்வர் ஸ்டாலின்?
தங்கள் கட்சியில் பதுங்கியுள்ள குற்றவாளிகளை, யாரும் பொது வெளியில் அம்லபடுத்த கூடாது என்பதற்கான எச்சரிக்கை மணியா இது?
அண்ணா பல்கலை மாணவியின் விபரங்கள் வெளியானது, தெரியாமல் நடந்த விபத்து எனில், இ.சி.ஆர்., சாலை சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண்ணின் பெயர் வெளியானது என்ன திட்டமிட்ட சதியா?
ஒரு முறை தவறு நடக்கலாம், ஒவ்வொரு முறையும் தற்செயலாகவே தவறு நடக்குமா?
தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பும் கிடையாது, உண்யைான பாலியல் குற்றவாளிகளுக்கு தண்டனையும் கிடைக்காது. நீதி கேட்டு போராடும் பெண்களுக்கு அனுமதியும் கிடையாது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.