தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/கள்ளக்குறிச்சி விவகாரத்தில் எந்த கால தாமதமும் இல்லை

கள்ளக்குறிச்சி விவகாரத்தில் எந்த கால தாமதமும் இல்லை

கள்ளக்குறிச்சி விவகாரத்தில் எந்த கால தாமதமும் இல்லை


ADDED : நவ 24, 2026 08:23 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 24, 2026 08:23 PM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை: ‘‘கள்ளக்குறிச்சி த.வெ.க., – எம்.எல்.ஏ., விவகாரத்தில் எந்த கால தாமதமும் இல்லை; முதல்வருக்கு விபரம் தெரிந்ததும் நடவடிக்கை எடுக்க தொடங்கியுள்ளார்,’’ என, காங்கிரஸ் எம்.எல்.ஏ., தாரகை கத்பட் கூறினார்.

நேற்று அவர் அளித்த பேட்டி:

கள்ளக்குறிச்சி த.வெ.க., – எம்.எல்.ஏ., அருள் விக்னேஷ் மீது, அம்மாவட்ட கலெக்டர் புகார் அளித்திருப்பது, இப்போது தான் தெரியவந்துள்ளது. இதை ஒரு பெண்ணாக, வெட்கப்பட வேண்டிய விஷயமாக பார்க்கிறேன். கலெக்டர் வாய் திறக்காததால், இந்த விவகாரம் வெளியில் தெரியவில்லை. எஸ்.பி.,யிடம் புகார் அளித்த பிறகு தான் விஷயம் தெரிந்துள்ளது. ஏற்கனவே, புகார் அளிக்கப்பட்டதா தலைமைச்செயலரும் சொல்லவில்லை. ஒருவேளை, தலைமைச்செயலரிடம் புகார் அளித்திருந்தால், அவர் நிச்சயம் நடவடிக்கை எடுத்திருப்பார்.

எங்களுக்கு இப்போது விவகாரம் தெரிந்ததும், அதை பற்றி கருத்து சொல்கிறோம். முதல்வர் விஜய்க்கு இன்றைக்கு தகவல் தெரிந்தததால், அவரும் நடவடிக்கை எடுக்க ஆரம்பித்துள்ளார். சட்டத்திற்கு உட்பட்டு, முதல்வர் நடவடிக்கை எடுப்பார்.

அரசு அதிகாரத்தில் இருக்கும் பெண்ணுக்கு, இப்படி ஆபாச ‘மெசேஜ்’ அனுப்பியதை தனிப்பட்ட முறையில் நான் கண்டிக்கிறேன். இந்த விவகாரத்தில், அரசு தரப்பில் எந்த கால தாமதமும் இல்லை. தவறு நடந்துள்ளது.

சம்பந்தப்பட்ட கலெக்டர் இப்போது தான் வாய் திறந்துள்ளார். யார் தவறு செய்தாலும், முதல்வர் நடவடிக்கை எடுத்து வருகிறார். அதேபோன்று, இந்த விவகாரத்திலும் நடவடிக்கை எடுப்பார்.

இவ்வாறு தாரகை கத்பட் கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us