உள்ளடக்கத்திற்கு செல்ல

ADDED : ஆக 01, 2026 05:06 AM

அ நிறம் | அளவு
சென்னை : தமிழகம் முழுதும் தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்கள் வாயிலாக, விவசாயிகளுக்கு உரங்கள், விதைகள் போன்றவற்றை, 'டான்பெட்' எனப்படும் கூட்டுறவு விற்பனை இணையம் வினியோகம் செய்கிறது.
சென்னை ஆ.ஏ.புரத்தில் உள்ள அதன் தலைமை அலுவலகத்தில், கூட்டுறவு துறை அமைச்சர் அமைச்சர் காந்திராஜ் நேற்று, அதிகாரிகளுடன் ஆய்வு கூட்டம் நடத்தினார்.
கூட்டத்தில் பேசிய அவர், ''உரங்கள் மற்றும் வேளாண் இடுபொருட்களின் வினியோகம் முழுதும் வெளிப்படை தன்மையுடனும், குறித்த காலத்திலும், எந்தவித புகார்களுக்கும் இடமளிக்காத வகையிலும் மேற்கொள்ளப்பட வேண்டும். விவசாயிகளுக்கு சிறந்த சேவைகளை வழங்க வேண்டும்,'' என, அதிகாரிகளுக்கு உத்தர விட்டுள்ளார்.
