தேச பாதுகாப்பில் சமரசம் கூடாது; ஹிந்து முன்னணி வலியுறுத்தல்
தேச பாதுகாப்பில் சமரசம் கூடாது; ஹிந்து முன்னணி வலியுறுத்தல்
ADDED : ஜூன் 10, 2026 07:00 PM

திருப்பூர்: ''தேசத்தின் பாதுகாப்பில் சமரசம் கூடாது. அத்து மீறுவோர் மீது மத்திய அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்று, ஹிந்து முன்னணி வலியுறுத்தியுள்ளது.
அதன் தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம் அறிக்கை: இந்திய பயணியர் விமானங்களை குறி வைத்து பாகிஸ்தான் திட்டமிட்டு நடத்திய சதி தெரியவந்துள்ளது. பயணியர் விமானத்தில் நவீன கருவிகள் மற்றும் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, இருப்பிட குழப்பத்தை ஏற்படுத்தி, விபத்து ஏற்படுத்த பாக்., சதி செய்வது மனித குலத்துக்கு எதிரானது. கடந்த இரு ஆண்டுகளில் பதிவான, 2,354 சிக்னல் குழப்பங்களுக்கு பாக். அரசுக்கு தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளது.
வளர்ந்து வரும் விமான சேவையால், இந்தியா பொருளாதார வளர்ச்சி அடைந்து வருகிறது. இதை சீர்குலைக்கும் சதியை மிகுந்த கண்காணிப்புடன் முறியடித்தாக வேண்டும். சதிகளுக்கு பின்னால் இருக்கும், பாக்., அரசை உலக அரங்கில் வெளிப்படுத்தி ஒடுக்க வேண்டும். நாட்டின் பாதுகாப்பில் சமரசம் கூடாது.
வந்தே பாரத் ரயில் மீது தாக்குதல் நடத்துவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். மத்திய, மாநில அரசுகள் மற்றும் புலனாய்வு துறை மிகுந்த எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும். உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் இருந்து வரும் அச்சுறுத்தலை கவனத்தில் கொண்டு, மத்திய, மாநில அரசுகள் அவசர கால நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
