திமுக கூட்டணியில் விரிசல் விழாது; இபிஎஸ் ஆசை நிராசையாகும் என்கிறார் திருமா
திமுக கூட்டணியில் விரிசல் விழாது; இபிஎஸ் ஆசை நிராசையாகும் என்கிறார் திருமா
ADDED : செப் 27, 2025 05:28 PM

சென்னை: 'திமுக கூட்டணியில் விரிசல் விழும் என்ற இபிஎஸ் ஆசை நிராசையாகும்' என விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
சென்னையில் நிருபர்களிடம் திருமாவளவன் கூறியதாவது: திமுக கூட்டணியில் விரிசல் விழும் என்ற இபிஎஸ்ன் ஆசை நிராசையாகும். விரிசல் விழும் அளவுக்கு திமுக கூட்டணி இல்லை என்பதுதான் எதார்த்தமான உண்மை. பாஜவின் ஆசையும் அதுவாக தான் இருக்கிறது.
ஆர்எஸ்எஸ் அமைப்பின் ஆசையும் அதுவாக தான் இருக்கிறது. அவர்களுக்கு மறைமுகமாகவும் நேரடியாகவும் தொண்டு செய்கிறவர்களின் கனவும் அதுவாக தான் இருக்கிறது. ஆனால் அந்த கனவு நினைவாகாது என்பது தான் எதார்த்த உண்மை. இவ்வாறு திருமாவளவன் கூறினார்.
தினம், தினம் எதிர்க்கட்சிகளை மட்டுமே கேள்வி கேட்கும் வழக்கம் கொண்ட திருமாவளவன் இன்று கூட்டணி கட்சிக்கு ஆதரவாக தனது கருத்துக்களை நிருபர்கள் சந்திப்பில் தெரிவித்து இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.