தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/தென் இந்தியாவில் தொகுதிகள் குறையாது: இறுதிகட்ட பிரசாரத்தில் சந்திரபாபு நாயுடு பேச்சு

தென் இந்தியாவில் தொகுதிகள் குறையாது: இறுதிகட்ட பிரசாரத்தில் சந்திரபாபு நாயுடு பேச்சு

தென் இந்தியாவில் தொகுதிகள் குறையாது: இறுதிகட்ட பிரசாரத்தில் சந்திரபாபு நாயுடு பேச்சு


UPDATED : ஏப் 21, 2026 11:43 AM

ADDED : ஏப் 21, 2026 11:42 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஏப் 21, 2026 11:43 AM ADDED : ஏப் 21, 2026 11:42 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சென்னை: ''நானும் ஒரு திராவிடன் தான்; அதை மறக்காதீர்கள், தென் இந்தியாவில் தொகுதிகள் குறையாது '' என நிருபர்கள் சந்திப்பில் ஆந்திரா முதல்வர் சந்திரபாபு நாயுடு தெரிவித்தார்.

தமிழக சட்டசபை தேர்தலுக்கான இறுதிகட்ட பிரசாரம் தீவிரமாக நடந்து வருகிறது. அந்தவகையில், தேஜ கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரசாரம் செய்ய ஆந்திரா முதல்வர் சந்திரபாபு தமிழகம் வந்தார்.

சென்னை கிண்டியில் நிருபர்களிடம் சந்திரபாபு நாயுடு கூறியதாவது: அரசியலுக்காக தான் திமுகவினர் மகளிர் இட ஒதுக்கீட்டை எதிர்க்கின்றனர்; டில்லியை வீழ்த்தியதாக ஸ்டாலின் பேசியது அதிர்ச்சியளிக்கிறது.

நாம் எல்லோரும் திராவிடர்கள் என்று அழைக்கப்படுகிறோம். தாய்மொழியை காப்பதில் தலைசிறந்தவர்கள் தமிழர்கள். ஆந்திராவுக்கும், தமிழகத்துக்கும் பல ஒற்றுமைகள் உள்ளன. 'நானும் ஒரு திராவிடன் தான்; அதை மறக்காதீர்கள்.

தென் இந்தியாவில் தொகுதிகள் குறையாது. 50 சதவீதம் அதிகரிக்கும். சென்னையில் சாலைகள் சரியில்லை, மழைநீர் வடிகால்வாய் பணிகள் முடியவில்லை.பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தமிழகத்தில் அதிகரித்துள்ளது. இவ்வாறு சந்திரபாபு நாயுடு கூறினார்.

தினமலர் நேரலை; வீடியோ பாருங்கள்!

சந்திரபாபு நாயுடு பிரசாரம்; தினமலர் யூடியூப் சேனலில் நேரலை ஒளிபரப்பு செய்யப்பட்டது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us