தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/ 'காலாண்டு விடுமுறையில் சிறப்பு வகுப்புகள் கூடாது'

 'காலாண்டு விடுமுறையில் சிறப்பு வகுப்புகள் கூடாது'

 'காலாண்டு விடுமுறையில் சிறப்பு வகுப்புகள் கூடாது'


ADDED : செப் 25, 2026 03:35 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 25, 2026 03:35 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சென்னை: 'காலாண்டு தேர்வு விடுமுறை நாட்களில், மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் நடத்தக் கூடாது' என, தலைமை ஆசிரியர்களுக்கு, பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தி உள்ளது.

தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளி மாணவ - மாணவியருக்கு, காலாண்டு தேர்வுகள், இன்றுடன் நிறைவடைகின்றன. மாணவர்களுக்கு, நாளை முதல் அக்.,4ம் தேதி வரை, காலாண்டு தேர்வு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. மீண்டும், அக்.,5ல் பள்ளிகள் திறக்கப்பட உள்ளன.

இந்த விடுமுறை நாட்களில், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகளில், மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் நடத்தக் கூடாது என, தலைமை ஆசிரியர்களுக்கு, பள்ளிக்கல்வித் துறை அறிவுறுத்தி உள்ளது.

மேலும், சுற்றுலாவுக்கு அழைத்து செல்லுதல் போன்ற செயல்களில் ஈடுபடக் கூடாது; மாணவர்களை பள்ளிக்கு அழைக்கும் பட்சத்தில் ஏற்படும் அசம்பாவிதங்களுக்கு, பள்ளித் தலைமை ஆசிரியர்களே முழு பொறுப்பேற்க நேரிடும் என, அறிவுறுத்தி உள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us