உள்ளடக்கத்திற்கு செல்ல

ADDED : நவ 26, 2026 10:45 PM

அ நிறம் | அளவு
துாத்துக்குடி: துாத்துக்குடி அனல் மின்நிலையத்தில் பணியின் போது தவறி விழுந்த தொழிலாளி பிச்சையா, 43, பரிதாபமாக உயிரிழந்தார்.
துாத்துக்குடி திரேஸ்புரத்தைச் சேர்ந்தவர் பிச்சையா; தெர்மல்நகர் அனல்மின் நிலைய ஒப்பந்த தொழிலாளி. இவர் நேற்று (நவ.,25), நிலக்கரி அரவை இயந்திரம் பகுதியில், புதிய தகடு அமைக்கும் பணியில் ஈடுபட்டபோது, திடீரென தவறி கீழே விழுந்தார்.
அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு, தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். மேல் சிகிச்சைக்காக மதுரை தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட பிச்சையா, உயிரிழந்தார். தெர்மல்நகர் போலீசார் வழக்கு பதிந்து, விசாரித்து வருகின்றனர்.
