ADDED : நவ 14, 2024 05:21 AM

கடையநல்லுாரில் நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் அளித்த பேட்டி:
கூட்டணி என்பது தற்கொலைக்கு சமமானது. அதனால்தான், தொடர்ந்து தனித்தே போட்டியிடுகிறேன். இனியும் நாம் தமிழர் கட்சி தனித்துதான் போட்டியிடும்.
மற்றவர்களுக்காக கொள்கையை விட்டுக் கொடுத்து விட்டு, யாரிடமும் கூட்டணி சேர வேண்டிய அவசியம் இல்லை. மக்களோடு மட்டும் தான் எங்கள் கூட்டணி. மக்களை மட்டும்தான் நாங்கள் நம்புகிறோம்.
நேர்மையற்ற ஆட்சியாளர்களே இங்கு உள்ளனர். அவர்களுக்கு மக்களையும் நேர்மையற்றவர்களாக்கும் வேலை இருக்கிறது.
அதனால் தான் யாரிடமும் கூட்டணி சேர்வதில்லை. கூட்டணி சேர்ந்தால், நல்லதை கேட்கும் திறனற்று போய் விடுவோம். தற்போது இருக்கும் எந்த கட்சியோடும் சேர்ந்து நல்லாட்சி கொடுக்க முடியாது.
தனித்து நின்று வெற்றி பெற்று அதிகாரத்திற்கு வர முடியாது. சொல்வதை ஏற்க மாட்டேன்.
கடந்த காலம் இல்லை என்றால் நிகழ்காலம் இல்லை. நிகழ்காலம் இல்லாதவர்களுக்கு எதிர்காலம் இல்லை. முன்னாடி கட்சி துவங்கியது நான்தான்.
அதிகாரத்தில் இருப்பதால் பலருக்கும் ஊடக வெளிச்சம் இருக்கிறது. என் பலவீனம், வலிமை பற்றி எனக்குத்தான் தெரியும். என்னிடம் காசு இல்லை. எனக்காக பேசும் ஊடகங்கள் இல்லை. இதனால் நாங்களே பேசிக் கொண்டிருக்கிறோம்.
களத்தில் எப்படி ஓடுவது என எங்களுக்கு தெரியும். ஆனால், எங்கள் ஓட்டம் எப்போதும் வேகமாகத்தான் இருக்கும்.
அரசியலில் எப்போதும் தடுமாற்றம் இல்லாமல் செல்கிறேன். நடிகர் விஜயுடன் எனக்கு எந்த முரணும் இல்லை; கட்சி கொள்கை, கோட்பாடுகளில்தான் நிறைய முரண்பாடு வருகிறது.
தி.மு.க.,வையும்கூட கொள்கை ரீதியில்தான் எதிர்க்கிறேன்; ஆளுங்கட்சி என்பதால் இல்லை. தாமிரபரணி ஆற்றை நஞ்சாக மாற்றி விட்டனர். இது, யாருடைய ஆட்சியில் நடந்தது என்பதை பார்க்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- நமது நிருபர் -