முருகருக்கு விளக்கேற்ற வேண்டும் என்று தானே கேட்கிறார்கள்? இதில் என்ன பிரச்னை; கேட்கிறார் சீமான்
முருகருக்கு விளக்கேற்ற வேண்டும் என்று தானே கேட்கிறார்கள்? இதில் என்ன பிரச்னை; கேட்கிறார் சீமான்
ADDED : நவ 28, 2026 12:42 PM

தூத்துக்குடி: திருப்பரங்குன்றம் தீபத்தூணில் விளக்கேற்றுவது தொடர்பாக நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தூத்துக்குடியில் செய்தியாளர்களிடம் பேசினார்.
அவர் கூறியதாவது; திமுக ஆட்சியிலும் சரி, தவெக ஆட்சியிலும் சரி, உன் மதம் சிறந்தது வழிபடு. என் மதமும் சிறந்தது வழிவிடு. இதுதான் கோட்பாடே. சிக்கந்தர் தர்காவில் வழிபடுவதற்கு எந்த இடையூறும் இருக்கக்கூடாது. இவர்கள் விளக்கேற்றுவதனால், எந்த பிரச்னையும் இல்லாமல் அரசே பாதுகாப்பு கொடுத்து, சரி நீங்கள் விளக்கேற்றிக் கொள்ளுங்கள். நீங்கள் வழிபட்டுக் கொள்ளுங்கள் என்றால் முடிந்து விட்டது.
அதைப் போய் இவ்வளவு தூரம் இழுத்துட்டு போக வேண்டிய அவசியமில்லை. ஒவ்வொரு ஆண்டும் இந்தப் பிரச்னை உருவாகிக் கொண்டே வரும். திமுக அரசின் போதே இதை சரிபண்ணி இருக்க வேண்டும். அதை விட்டு விட்டார்கள்.
முருகனுக்கு விளக்கு ஏற்றத்தானே கேட்கிறார்கள். அதில் என்ன பிரச்னை. விளக்கை ஏற்றிக் கொண்டு போங்க, உரிய பாதுகாப்பு கொடுக்கும் அரசு. இரு சமூக பெரியவர்களை அழைத்து பேசி, 'யாருக்கும் எந்த பிரச்னையும் இல்லாமல் வழிபாடு நடத்திகிட்டு, விளக்கேற்றிக் கொண்டு போங்க. நீங்க சிக்கத்தர் தர்காவில் கிடா வெட்டி பிரியாணி ஆக்குறீங்களா, ஆக்கிக்கோங்க. நீங்க விளக்கேற்றி வழிபடுகிறீர்களா? வழிபடுங்க,' என்று சொல்லிக் கொண்டு போவதில் என்ன பிரச்னை இருக்கிறது, இவ்வாறு கூறினார்.
