ADDED : ஏப் 15, 2025 01:51 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பத்து நாட்களுக்கு முன், 'பா.ஜ.,வுடன் இனி கூட்டணியே இல்லை' என கூறிய அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் எங்கே இருக்கிறார் என்று தேடுங்கள்.
'அறிவாலயத்தில் இருந்து செங்கல்லை உருவுவேன்' என்று கூறிய தமிழக பா.ஜ., முன்னாள் தலைவர் அண்ணாமலையை, தமிழகத்தில் இருந்தே உருவி விட்டனர். தி.மு.க.,விற்கு யார் துரோகம் செய்தாலும், அவர்கள் உருப்பட முடியாது.
யார் உண்மையாக இருக்கின்றனர்; யார் தவறு செய்கின்றனர் என்பது, தமிழக மக்களுக்கு நன்கு தெரியும். கொண்ட கொள்கையில் உறுதியாக இருப்பவர்கள் தான் நாங்கள்.எத்தனை அணி போட்டியிட்டாலும் சரி, தனித்தனியாக நின்றாலும் சரி, தி.மு.க., மிகப் பெரிய வெற்றி பெற்று, மீண்டும் ஆட்சி அமைக்கும்.
-அன்பரசன்,
தமிழக அமைச்சர்