ADDED : ஆக 11, 2025 03:51 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தே.மு.தி.க., தற்போது எந்த கட்சியுடனும் கூட்டணியில் இல்லை; நடுநிலை வகிக்கிறோம். வரும் ஜன., 9ல், கடலுார் மாநாட்டில் கூட்டணி குறித்து அறிவிப்போம். தமிழகத்தில், தி.மு.க., - அ.தி.மு.க.,வுக்கு அடுத்த மூன்றாவது பெரிய கட்சியாக தே.மு.தி.க., உள்ளது. மக்கள் கஷ்டம் எனக்கு தெரியும். வரும் சட்டசபை தேர்தலில், மகத்தான கூட்டணி அமைத்து வெற்றி பெறுவோம். தமிழகத்தில், 100 நாள் வேலை திட்டம் முறையாக செயல்படுத்தப்படவில்லை. வெறும் 30 கி.மீ., தொலைவில் ஒகேனக்கல் இருந்தும், தர்மபுரி மாவட்டத்தில் தண்ணீர் பிரச்னை உள்ளது. விவசாயத்திற்கு தண்ணீர் இல்லை. தமிழகத்தில் எங்கு பார்த்தாலும் டாஸ்மாக் மதுக்கடைகளை திறந்து, மக்களை குடிகாரர்களாக மாற்றி வைத்துள்ளனர்.
-பிரேமலதா, பொதுச்செயலர், தே.மு.தி.க.,