சினிமா இயக்குனரின் தேசிய விருதை திருப்பிக் கொடுத்து மன்னிப்பு கேட்ட திருடர்கள்
சினிமா இயக்குனரின் தேசிய விருதை திருப்பிக் கொடுத்து மன்னிப்பு கேட்ட திருடர்கள்
UPDATED : பிப் 13, 2024 11:22 AM
ADDED : பிப் 13, 2024 10:33 AM

உசிலம்பட்டி : இயக்குனர் மணிகண்டனின் தேசிய விருது, நகை, பணம் ஆகியவை கொள்ளை போன நிலையில் தேசிய விருதை மட்டும் திருப்பி தந்து மன்னிப்பு கடிதம் வைத்து சென்றுள்ளனர் திருடர்கள்.
‛‛காக்கா முட்டை, கிருமி, குற்றமே தண்டனை, ஆண்டவன் கட்டளை, கடைசி விவசாயி'' போன்ற படங்களை இயக்கியவர் மணிகண்டன். இவற்றில் காக்கா முட்டை, கடைசி விவசாயி படங்களுக்காக தேசிய விருது வாங்கினார். இவரது மதுரை, உசிலம்பட்டி வீட்டில் கடந்த வாரம் திருட்டு நடந்துள்ளது. அவரின் 2 தேசிய விருதுக்கான பதக்கங்கள், 1 லட்சம் ரொக்கம் மற்றும் 5 பவுன் தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டன. இதுபற்றி உசிலம்பட்டி நகர் காவல் போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.