தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/திருச்செந்தூர் கோவில் யானை மிதித்து இருவர் பலி

திருச்செந்தூர் கோவில் யானை மிதித்து இருவர் பலி

திருச்செந்தூர் கோவில் யானை மிதித்து இருவர் பலி


UPDATED : நவ 18, 2024 05:04 PM

ADDED : நவ 18, 2024 04:38 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 18, 2024 05:04 PM ADDED : நவ 18, 2024 04:38 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

திருச்செந்தூர்: திருச்செந்தூர் முருகன் கோவிலில் யானை மிதித்து பாகன் உள்ளிட்ட 2 பேர் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

முருகனின் அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூர் கோவிலில் உள்ள தெய்வானை யானை அனைத்து நாட்களிலும் பக்தர்களுக்கு ஆசி வழங்குவது உண்டு. இந் நிலையில், யானை கட்டி வைக்கப்பட்டு இருந்த இடத்துக்கு சென்ற பாகன் உதயகுமார் பழங்கள் கொடுத்துக் கொண்டிருந்தார். உடன் அவரது உறவினர் சிசுபாலன் இருந்துள்ளார்.

பழங்கள் சாப்பிட்டுக் கொண்டிருந்த போது யானை திடீரென திமிறி உள்ளது. நொடிப்பொழுதில் ஆக்ரோஷம் கொண்டு அருகில் இருந்த பாகன் உதயகுமார், சிசுபாலன் இருவரையும் தூக்கி போட்டு மிதித்தது.

இதில், சிசுபாலன் சம்பவ இடத்திலேயே உயிரிழக்க, பாகன் உதயகுமார் சிகிச்சை பலனின்றி மருத்துவனையில் உயிரிழந்தார். யானை 2 பேரை மிதித்து கொன்றுவிட்டதை அறிந்த பக்தர்கள் பீதி அடைந்து ஓடினர்.

தகவலறிந்த கோவில் ஊழியர்கள் போலீசுக்கு உடனடியாக தகவல் தெரிவித்து விட்டு, யானை தெய்வானை வழக்கமாக கட்டி வைக்கப்படும் இடத்திற்கு சென்றனர். பின்னர் நீரை பீய்ச்சி அடித்து யானையின் ஆக்ரோஷத்தை கட்டுப்படுத்தினர்.

சம்பவம் பற்றி கால்நடை மருத்துவக்குழுவுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது. யானையை முழுமையான மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்திய பின்னரே எதனால் ஆக்ரோஷம் ஏற்பட்டது பற்றிய முழு விவரங்கள் தெரிய வரும் என்று கோவில் ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us