அரசியலை புரிஞ்சிக்கணும்: தொண்டர்களுக்கு திருமா அறிவுரை
அரசியலை புரிஞ்சிக்கணும்: தொண்டர்களுக்கு திருமா அறிவுரை
ADDED : ஜன 07, 2026 03:59 AM

சென்னை: 'தி.மு.க., மற்றும் அ.தி.மு.க.,வில் ஒரே நபர் 30, 40 ஆண்டுகளாக மாவட்டச் செயலர்களாக இருந்தாலும், அக்கட்சியினர் ஏற்றுக் கொள்கின்றனர். அதேபோல் வி.சி.,யினரும் ஏற்றுக்கொள்ள வேண்டும்' என, வி.சி., தலைவர் திருமாவளவன் அறிவுரை வழங்கி உள்ளார்.
அவர் வெளியிட்ட வீடியோ பதிவில் கூறியிருப்பதாவது:
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்டச் செயலர்கள் மற்றும் நிர்வாகிகள் நியமனத்தில், கட்சியினர் சிலர் அதிருப்தி தெரிவித்து தலைமைக்கு எதிரான கருத்துக்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
மாவட்டச் செயலர்கள் வயது வரம்பு 45 என்ற அடிப்படையிலும், கட்சியின் வளர்ச்சிக்கு ஒவ்வொருவரும் செய்த நன்மை அடிப்படையிலும் மா.செ.,க்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
தி.மு.க., மற்றும் அ.தி.மு.க., வில், ஒரே நபர் 30, 40 ஆண்டுகளாக மாவட்டச் செயலராக இருக்கின்றனர். அக்கட்சிகளில் நியமிக்கப்படுவோரைக் காட்டிலும், தீவிரமாக களப்பணியாற்றக் கூடியவர்கள் நிறைய பேர் உள்ளனர்.
ஆனாலும், தலைமை எடுத்த முடிவு என்பதால், யார் நியமனத்துக்கு எதிராகவும் அக்கட்சியினர் கேள்வி எழுப்புவதில்லை.
கட்சி தலைமை எடுக்கும் முடிவு சரியாக இருக்கும் என்று நம்பி, தலைமை எடுக்கும் முடிவை ஒப்புக்கொள்ளும் நிலை வி.சி.,யிலும் வர வேண்டும். அப்படியொரு நிலையை தான், வி.சி.,யினரிடம் எதிர்பார்க்கிறேன்.
துாக்கம் இல்லாமல் பணியாற்றுகிறேன். அதனால், எனக்கு பல்வேறு உடல்நல பாதிப்புகள் உள்ளன. இருந்தாலும், கட்சி வளர்ச்சிக்கு தொடர்ந்து பணியாற்றி வருகிறேன்.
ஒரு தொகுதியில், தகுதியான நபர் இல்லையென்றால், மற்றொரு தொகுதியில் சீனியாரிட்டி அடிப்படையில் இருப்பவர்களை நியமிக்கிறோம். இவற்றை கட்சியினர் ஏற்க வேண்டும்.
கட்சி யை சீர்குலைக்கும் வகையில், மனதில் பட்டதையெல்லாம் சமூக வ லை தளங்களில் பதிவிடக் கூடாது. அரசியல் புரிதலோடு தான் எந்த விஷயத்தையும் அணுக வேண்டும். இனி மேலும், நிர்வாகிகள் நி யமிக்கப்பட உள்ளனர்.
ஏற்கனவே நியமிக்கப்பட்டவர்களில் கூட, ஒருசில மாற்றங்கள் இருக்கும். ஆனால், முழுமையாக மாற்ற முடியாத நெருக்கடி உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

