துக்க நிகழ்வில் கைகுலுக்கிய திருமாவளவன் - அன்புமணி
துக்க நிகழ்வில் கைகுலுக்கிய திருமாவளவன் - அன்புமணி
ADDED : பிப் 27, 2026 07:26 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை: இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முது பெரும் தலைவர் நல்லகண்ணுவுக்கு அஞ்சலி செலுத்தும் இடத்தில் சந்தித்த திருமாவளவன் - அன்புமணி ஆகியோர் கைகுலுக்கி நலம் விசாரித்தனர்.
பா.ம.க., - வி.சி., கட்சியினரிடையே கருத்து மோதல் இருந்து வருகிறது.
'பா.ம.க., இடம்பெறும் கூட்டணியில் நாங்கள் இருக்க மாட்டோம்' என, வி.சி., தலைவர் திருமாவளவன் தெரிவித்து வருகிறார். இந்நிலையில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முதுபெரும் தலைவர் நல்லகண்ணு உடல், சென்னை தி.நகரில் உள்ள அக்கட்சி அலுவலகத்தில் நேற்று பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்தது.
அப்போது அஞ்சலி செலுத்த வந்த வி.சி., தலைவர் திருமாவளவன், பா.ம.க., தலைவர் அன்புமணி ஆகியோர் சந்தித்து கொண்டனர்; இருவரும் கைகுலுக்கி நலம் விசாரித்து கொண்டனர்.

