திருப்பரங்குன்றம் விவகாரம்; டிசம்பர் 13ல் உண்ணாவிரத போராட்டம் நடத்த ஐகோர்ட் கிளை அனுமதி
திருப்பரங்குன்றம் விவகாரம்; டிசம்பர் 13ல் உண்ணாவிரத போராட்டம் நடத்த ஐகோர்ட் கிளை அனுமதி
ADDED : டிச 11, 2025 02:38 PM

சென்னை: திருப்பரங்குன்றம் மலை தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற வலியுறுத்தி, அந்த ஊர் கிராம மக்கள் சார்பில் டிசம்பர் 13ல் உண்ணாவிரத போராட்டம் நடத்த, ஐகோர்ட் மதுரைக்கிளை அனுமதி வழங்கி உத்தரவிட்டது.
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்துாணில் கார்த்திகை தீபம் ஏற்றுவது தொடர்பாக எழுந்த பிரச்னையில், உயர்நீதிமன்றம் உத்தரவிட்டும் அரசு தரப்பில் அனுமதி மறுக்கப்பட்டது. இதை எதிர்த்து பல்வேறு அமைப்புகளும் கண்டனம் தெரிவித்தது. நீதிமன்ற அவமதிப்பு வழக்கு ஐகோர்ட் மதுரைக்கிளையில் விசாரணையில் உள்ளது.
இந்த விவகாரம் தொடர்பாக, சுப்ரீம்கோர்ட்டில் தமிழக அரசு மேல்முறையீடு செய்துள்ளது. இத்தைய சூழலில், திருப்பரங்குன்றம் மலை தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற வலியுறுத்தி, அந்த ஊர் மக்கள் சார்பில், டிசம்பர் 13ம் தேதி உண்ணாவிரத போராட்டம் நடத்த அனுமதி கோரப்பட்டது. இதற்கு அனுமதி மறுக்கப்பட்டது.
இதனால் உண்ணாவிரத போராட்டம் நடத்த அனுமதி கோரி, ஐகோர்ட் மதுரைக்கிளையில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு இன்று (டிச.,11) இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது, '' 50 பேர் மட்டுமே போராட்டத்தில் பங்கேற்க வேண்டும். அரசியல் பேசக்கூடாது என நிபந்தனை விதித்து, அனுமதி அளித்து ஐகோர்ட் மதுரைக்கிளை உத்தரவிட்டது.

