ஆர்.எம்.மகாவீர் ஜூவல்லரியில் திருவள்ளுவர் தின விழா
ஆர்.எம்.மகாவீர் ஜூவல்லரியில் திருவள்ளுவர் தின விழா
ADDED : ஜன 16, 2025 03:43 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடலுார் : கடலுார் திருப்பாதிரிப்புலியூர், தேரடி தெருவில் உள்ள ஆர்.எம்.மகாவீர் ஜூவல்லரியில், தை 2ம் தேதியான நேற்று திருவள்ளுவர் தினம் கொண்டாடப்பட்டது.
விழாவில் கடை உரிமையாளர் ஆனந்த்குமார், திருவள்ளுவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். விஜயகுமார், அரிஹந்த், சித்தார்த், சுப் ஜூவல்லர்ஸ் பிரைவேட் லிமிடெட் உரிமையாளர் மனிஷ்க் மற்றும் கடை ஊழியர்கள் பங்கேற்றனர்.
அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது.