இது விஜய் மாடல் அரசு; எதிர்காலம் பத்திரமாக இருக்கிறது:சபாநாயகர் பிரபாகர் பெருமிதம்
இது விஜய் மாடல் அரசு; எதிர்காலம் பத்திரமாக இருக்கிறது:சபாநாயகர் பிரபாகர் பெருமிதம்
ADDED : ஜூன் 16, 2026 01:54 PM

சென்னை: தற்போது தமிழகத்தில் இருப்பது விஜய் மாடல் அரசு; ஒரு புன்னகையால் மாற்றத்தை ஏற்படுத்தியவர் விஜய். எதிர்காலம் பத்திரமாக இருக்கிறது என சபாநாயகர் பிரபாகர் தெரிவித்தார்.
சென்னையில் எம்எல்ஏக்களுக்கான புத்தாக்க பயிற்சியை முதல்வர் விஜய் குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில் சபாநாயகர் பிரபாகர் பேசியதாவது: முதல்வர் விஜய் மாடல் அரசு; எதிர்காலம் பத்திரமாக இருக்கிறது. மக்களுக்கு நம்பிக்கை பிறந்திருக்கிறது.புதிய எம்எல்ஏக்களின் கன்னி பேச்சில் யாரும் குறுக்கிட மாட்டார்கள்.பழைய வரலாற்றை புரட்டி பார்க்க வேண்டும்.
எனது கன்னி பேச்சில் சலசலப்பு ஏற்பட்டபோது யாரும் குறுக்கிடவில்லை . நாட்டு மக்கள் நம்மிடம் அதிகம் எதிர்பார்க்கிறார்கள்; சட்டசபை வரலாற்றை நூலகத்திற்கு சென்று படிக்க வேண்டும். ஒரு புன்னகையால் மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என நிரூபித்துக்காட்டியவர் முதல்வர் விஜய்.
தான் செல்கிற இடமெல்லாம் வெல்லும் இடம்தான் என்பதை தேர்தல் களத்தில் நிரூபித்துக்காட்டியவர். ஒரு மாபெரும் சக்தியாக வளர்ந்து கொண்டிருக்கிறார். இவ்வாறு சபாநாயகர் பிரபாகர் பேசினார்.
சிறப்பு வீடியோ!
MLAக்களுக்கு 2 நாள் பயிற்சியை CM விஜய் துவக்கி வைப்பு; தினமலர் வெப்சைட் மற்றும் யூடியூப் சேனலில் நேரலை ஒளிபரப்பு
