sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, மார்ச் 29, 2026 ,பங்குனி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

முன்னோடி மாநிலமாக தமிழகம் திகழ்வதற்கு காரணம் இதுதான்; கண்டுபிடித்தார் ஓபிஎஸ்

/

முன்னோடி மாநிலமாக தமிழகம் திகழ்வதற்கு காரணம் இதுதான்; கண்டுபிடித்தார் ஓபிஎஸ்

முன்னோடி மாநிலமாக தமிழகம் திகழ்வதற்கு காரணம் இதுதான்; கண்டுபிடித்தார் ஓபிஎஸ்

முன்னோடி மாநிலமாக தமிழகம் திகழ்வதற்கு காரணம் இதுதான்; கண்டுபிடித்தார் ஓபிஎஸ்

13


ADDED : மார் 20, 2026 10:40 PM

Google News

13

ADDED : மார் 20, 2026 10:40 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஸ்ரீவில்லிபுத்துார்; ''முதல்வர் ஸ்டாலின் உழைப்பினால் இன்று இந்தியாவில் முன்னோடி மாநிலமாக தமிழகம் திகழ்கிறது, ''என முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் ஸ்ரீவில்லிபுத்துாரில் பேசினார்.

ஸ்ரீவில்லிபுத்துாரில் நடந்த தி.மு.க., கூட்டத்தில் அவர் பேசியதாவது; மத்தியரசு போதிய அளவிற்கு நிதி தராத நிலையிலும் தமிழக அரசின் திட்டங்களை மட்டுமின்றி அவர்களின் திட்டங்களையும் திறம்பட செயல்படுத்தியவர் முதல்வர் ஸ்டாலின். அவரின் உழைப்பினால் இன்று இந்தியாவில் முன்னோடி மாநிலமாக தமிழகம் திகழ்கிறது. அனைத்து தரப்பு மக்களுக்கான நலத்திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தி உள்ளார். இதனால் மக்கள் மகிழ்ச்சியாக உள்ளனர்.

எம்.ஜி.ஆர், ஜெயலலிதா உருவாக்கிய மாபெரும் இயக்கத்தை மண்வெட்டி கொண்டு பழனிச்சாமியும், கடப்பாரை கொண்டு உதயகுமாரும் அழித்துவிட்டனர். ஆனால் 75 ஆண்டுகளாக தமிழர்கள் நலனுக்காக தி.மு.க. பாடுபட்டுக் கொண்டிருக்கிறது. ஜெயலலிதா இறந்தபோது நான் மிகவும் வருத்தத்துடன் இருந்தேன்.

தற்போது தி.மு.க.வில் சேர்ந்ததால் மிகுந்த மகிழ்ச்சியுடன் இருக்கிறேன். சட்டசபையில் அனைவரையும் அரவணைத்து ஸ்டாலின் செயல்படுகிறார். எனவே, ஸ்டாலின் தொடரட்டும், தமிழகம் வெல்லட்டும் என மக்கள் கூறுகின்றனர். என பேசினார்.விழாவில் அமைச்சர்கள் சாத்தூர் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு பங்கேற்று பேசினர்.






      Dinamalar
      Follow us