ADDED : பிப் 14, 2024 02:58 AM

எஸ்.ஆர்.மணியன், சென்னையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்:
'பெற்றோர் செய்த பாவம், பிள்ளைகள் தலையிலே' என்று ஒரு சொலவடை உண்டு. அதுபோல, நாடு ஆங்கிலேயர் ஆட்சியில் இருந்து விடுதலை பெற்ற போது, அந்த விடுதலைக்கு அடிகோலியவர்கள் செய்த மாபெரும் பிழையை, இன்று நாட்டிலுள்ள 140 கோடி மக்களும் அனுபவித்து கொண்டிருக்கிறோம் என்றால் அது மிகையில்லை.
இந்தியாவை துண்டித்து, பாகிஸ்தான் என்று ஜின்னா பிரிந்து சென்றாரோ, நாமும் அன்றே ஹிந்துஸ்தான் என அறிவித்திருந்தால், நமக்கு இந்த அளவுக்கு பொருள் நஷ்டம், உயிர் நஷ்டங்கள், எல்லை பிரச்னைகள் உண்டாகி இருக்காது; நாடு பல விஷயங்களில் எப்போதோ முன்னுக்கு வந்திருக்கும். அந்த பெருமையும், புகழும் விடுதலை பெற்று தந்த காங்கிரஸ் கட்சிக்கும் கிடைத்திருக்கும். அதை விடுத்து, இந்தியாவை, மதச்சார்பற்ற நாடு என்று அறிவித்தனர். இதுதான், இன்று வரை தொடரும் பல பிரச்னைகளுக்கு காரணம்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த, கேரள முதல்வர் பினராயி விஜயன், 'மதச்சார்பற்ற நாட்டை மதவாத நாடாக மாற்ற சிலர் முயற்சிக்கின்றனர். துரதிர்ஷ்டவசமாக அரசு பதவிகளில் இருக்கும் சிலர் இந்த முயற்சியில் ஈடுபடுகின்றனர்' என்று நேரடியாக சொல்ல தைரியமின்றி, மறைமுகமாக பா.ஜ.,வை குறி வைத்து குதறி இருக்கிறார்.
மதச்சார்பற்ற நாடு என்ற போர்வையை போர்த்திய உங்களால், காஷ்மீருக்கு கொடுத்திருந்த சிறப்பு அந்தஸ்தை விலக்கி, இந்த நாட்டின் ஒரு மாநிலமாக சேர்க்கவோ, அயோத்தியில் பிரச்னைக்குரிய இடத்தை ஆக்கிரமித்திருந்த இடத்தை மீட்கவோ முடிந்ததா... இல்லையே?
அதற்கு தேசப்பற்றும், இறை பக்தியும் இணைந்த பா.ஜ., என்ற அரசியல் கட்சி தானே தேவையாக இருந்தது. எனவே, காங்., ஆட்சியில் 50 ஆண்டுகளில் செய்யாத சாதனைகளை, 10 ஆண்டுகளில் செய்த பா.ஜ.,வை குறை கூற, யாருக்கும் தகுதியில்லை.TTV D

