sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 15, 2025 ,கார்த்திகை 29, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

இது உங்கள் இடம்: நடிகர்கள் கட்சியின் பின்னணி என்ன?

/

இது உங்கள் இடம்: நடிகர்கள் கட்சியின் பின்னணி என்ன?

இது உங்கள் இடம்: நடிகர்கள் கட்சியின் பின்னணி என்ன?

இது உங்கள் இடம்: நடிகர்கள் கட்சியின் பின்னணி என்ன?


ADDED : பிப் 09, 2024 03:41 AM

Google News

ADDED : பிப் 09, 2024 03:41 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அ.ரவீந்திரன், குஞ்சன்விளை, குமரி மாவட்டத்தில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்:

நம் திரை உலகை சேர்ந்தவர்களுக்கு, தமிழக அரசியல் மீது மோகம் அதிகம். அரசியலில் குதித்து, ஆட்சியை பிடிக்க வேண்டும் என ஆசைப்பட்டவர்கள், 'புலியை பார்த்து பூனை சூடு போட்டது' போலானது தான் மிச்சம். 'எம்.ஜி.ஆர்., சினிமா வாயிலாக அரசியலில் நுழைந்து ஆட்சியை பிடித்தது போல், நாமும் ஆட்சியை பிடிக்கலாம்' என நினைத்து, பலரும் அரசியலில் குதித்தனர், குதிக்கின்றனர்.

தமிழ் திரையுலக ஜாம்பவான் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் துவங்கி பாக்யராஜ், ராஜேந்தர், கமல், சரத்குமார் என பட்டியல் தொடரும். இதில், கேப்டன் விஜயகாந்த் தே.மு.தி.க.,வை துவக்க, அவருடைய திருமண மண்டபத்தை ஆளுங்கட்சி இடித்ததே முதன்மையான காரணமாக இருந்தது. அடுத்து ரஜினிகாந்த், 'நான் வருவேன்; ஆனா, எப்போ வருவேன் எப்படி வருவேன் என்பது ஆண்டவனுக்கு தான் தெரியும். என் வழி தனி வழி' என்றெல்லாம், 'பில்டப்' கொடுத்தவர், கடைசியாக, 'அரசியல் வேண்டாம்; ஆளை விடுங்க சாமி' என, ஒதுங்கி விட்டார்.

அடுத்ததாக உலக நாயகன் கமல்ஹாசன், மக்கள் நீதி மய்யம் என்ற பெயரில் அரசியலில் குதித்தார். இவர் நடித்த படம் ஒன்று வெளிவருவதில் பிரச்னை வர, 'இந்த நாட்டை விட்டு வெளியேறுவதை தவிர வேறு வழி இல்லை' என புலம்பியவர், அரசியல் வாயிலாக, தனக்கொரு பாதுகாப்பு அரணை தேடியபடியே இருக்கிறார்.

அதேபோல, நடிகர் விஜயும் இப்போது அரசியலில் குதித்துள்ளார். இவரது பல படங்கள் வெளியீட்டின்போது அ.தி.மு.க., மற்றும் தி.மு.க., அரசால் பல இடையூறுகளை சந்தித்ததே, தற்போது அரசியல் கட்சி வரை அவரை இழுத்து வந்துள்ளது.

இப்படி நடிகர்கள், தங்களுக்கு வரும் சொந்த பிரச்னையை தடுக்க, எதிரிகளை பயமுறுத்த, ரசிகர்களை கேடயமாக பயன்படுத்த, அரசியல் கட்சி என்ற அமைப்பை உருவாக்குகின்றனர். மேலும், பிரபல நடிகர்களின் ரசிகர் பலத்தை தங்கள் கட்சிக்கு ஆதரவாக திருப்ப வேண்டும் என, சில பெரிய அரசியல் கட்சிகள் நிர்பந்தம் செய்யும் போது, நடிகர்கள் இருதலை கொள்ளி எறும்பாக தவிக்கின்றனர்.

இதை, ரசிகர்களுக்கு நேரடியாக பகிரங்கமாக சொல்ல முடியாமல், கடந்த சட்டசபை தேர்தலில் தி.மு.க.,வுக்கு ஆதரவு தருவது போல, கருப்பு சிவப்பு சைக்கிளில் ஓட்டளிக்க நடிகர் விஜய் சென்றது ஒரு உதாரணம்.

இப்படி, மற்ற கட்சிகளுக்கு பயப்படுவதற்கு பதில் நாமே கட்சி துவங்கினால் என்ன என்ற யோசனையின் வெளிப்பாடே, நடிகர் விஜயின் அரசியல் கட்சி. இது, அரசியல் வானில் ஜொலிக்குமா அல்லது மின்மினி பூச்சியாக மின்னி மறையுமா என்பதை காலம் தான் தீர்மானிக்கும்.






      Dinamalar
      Follow us