திருப்பரங்குன்றம் மலையில் இதை அனுமதிக்க கூடாது; ஐகோர்ட்டில் மனுத்தாக்கல்!
திருப்பரங்குன்றம் மலையில் இதை அனுமதிக்க கூடாது; ஐகோர்ட்டில் மனுத்தாக்கல்!
ADDED : ஜன 28, 2025 12:10 PM

மதுரை: மதுரை திருப்பரங்குன்றம் முருகப்பெருமானின் மலை மீது ஆடு கோழி மாடு பலியிடவோ, மலை மீது அசைவ உணவு கொண்டு செல்லவோ தடை விதிக்க வேண்டும் என ஐகோர்ட் மதுரைக்கிளையில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
கடந்த மாதம் ராஜபாளையத்தை சேர்ந்த ஒரு குடும்பத்தினர் ஆடு, சேவலுடன் திருப்பரங்குன்றம் மலை மேல் செல்ல முன்றனர். அவர்களை போலீசார் தடுத்தனர். ஜன.,18ல் மலை மேல் தர்காவில் ஆடு, கோழி வெட்டி சமபந்தி விருந்து கொடுக்கப் போவதாக சில முஸ்லிம் அமைப்பினர் மலையேற முயன்றனர்.
அவர்களையும் போலீசார் தடுத்தனர். இந்நிலையில், இன்று (ஜன.,28) ஐகோர்ட் மதுரைக் கிளையில் ஹிந்து மக்கள் கட்சி மதுரை மாவட்டத்தலைவர் சோலை கண்ணன் வழக்கு தாக்கல் செய்தார். அவர், 'மதுரை திருப்பரங்குன்றம் முருகப்பெருமானின் மலை மீது ஆடு கோழி மாடு பலியிடவோ,மலை மீது அசைவ உணவு கொண்டு செல்லவோ தடை விதிக்க வேண்டும். மலையின் பெயரை மாற்றக்கூடாது.
மலையின் புனிதத்தை பாதுகாக்க உத்தரவிட வேண்டும்' என கூறியிருந்தார். ஏற்கனவே இது போல் நிலுவையில் உள்ள மற்றொரு வழக்குடன் சேர்த்து, பிப்.4ம் தேதி விசாரணைக்கு பட்டியலிட ஐகோர்ட் மதுரைக்கிளை நீதிபதி உத்தரவிட்டார்.