தூத்துக்குடி இரட்டைக் கொலை வழக்கு: எஸ்.ஐ.,யை தாக்கி விட்டு தப்பியவரை துப்பாக்கியால் சுட்டுப் பிடித்த போலீசார்
தூத்துக்குடி இரட்டைக் கொலை வழக்கு: எஸ்.ஐ.,யை தாக்கி விட்டு தப்பியவரை துப்பாக்கியால் சுட்டுப் பிடித்த போலீசார்
ADDED : மார் 06, 2025 09:18 AM

தூத்துக்குடி: தூத்துக்குடி மேலநம்பிபுரத்தில் தாய், மகள் கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த முனீஸ்வரன் என்ற நபரை போலீசார் காலில் சுட்டுப் பிடித்தனர்.
தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் அருகே மேல நம்பிபுரத்தில் தாய் சீதாலட்சுமி, 75, மகள் ராமஜெயந்தி, 45, ஆகியோர் வீட்டில் மர்மமான முறையில் இறந்து கிடந்தனர். இவர்களது வீட்டில் 15 பவுன் நகைகளை காணவில்லை. டி.ஜ.ஜி., சந்தோஷ் ஹதிமணி தலைமையிலான போலீஸ் அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
இந்த வழக்கில் முனீஸ்வரன் என்பவரை போலீசார் தேடி வந்தனர். இவரை பிடிக்கச் சென்ற எஸ்.ஐ., முத்துராஜை அரிவாளால் வெட்டி விட்டு முனீஸ்வரன் தப்ப முயன்றார். அப்போது போலீசார் தற்காப்புக்காக சுட்டு பிடித்தனர்.
போலீசார் சுட்டதில் வலது காலில் காயம் ஏற்பட்ட முனிஸ்வரன் மற்றும் எஸ்.ஐ., முத்துராஜ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.