உள்ளடக்கத்திற்கு செல்ல
துாத்துக்குடி - நரசப்பூர் சிறப்பு ரயில்கள் அறிவிப்பு
துாத்துக்குடி - நரசப்பூர் சிறப்பு ரயில்கள் அறிவிப்பு
ADDED : ஆக 22, 2026 01:43 AM
அ நிறம் | அளவு
சென்னை: துாத்துக்குடியில் இருந்து, எழும்பூர் வழியாக, ஆந்திர மாநிலம் நரசப்பூருக்கு, சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன.
இது குறித்து, தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிக்கை: துாத்துக்குடியில் இருந்து, வரும் செப்., 7, 14, 21, 28ம் தேதிகளில், இரவு 11:30 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில், அடுத்த மூன்றாம் நாள், அதிகாலை 12:20 மணிக்கு நரசப்பூர் செல்லும்
நரசப்பூரில் இருந்து, வரும் செப்., 9, 16, 23, 30ம் தேதிகளில், அதிகாலை 4:00 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில், மறுநாள் காலை 4:30 மணிக்கு துாத்துக்குடி செல்லும். இந்த ரயில், கோவில்பட்டி, சாத்துார், விருதுநகர், மதுரை, திண்டுக்கல், திருச்சி, தஞ்சாவூர், கும்ப கோணம், மயிலாடுதுறை, சிதம்பரம், விழுப் புரம், எழும்பூர் வழியாக இயக்கப்பட உள்ளது.
இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.
