UPDATED : மார் 08, 2025 07:31 AM
ADDED : மார் 08, 2025 07:28 AM

சென்னை: தமிழகத்தில் பல்வேறு இடங்களில் நேற்று (மார்ச் 07) சிலர் போக்சோ வழக்குகளில் கைது செய்யப்பட்டுள்ளனர். அதன் விபரம் பின்வருமாறு:
அப்ப திருட்டு; இப்ப போக்சோ
விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த, 15 வயது மாணவி, திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அருகே பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ் 1 படிக்கிறார். இவர், அப்பகுதியில் அரசு மாணவியர் விடுதியில் தங்கியுள்ளார். கடந்த, 24ம் தேதி சொந்த ஊருக்கு செல்வதாக விடுதி காப்பாளரிடம் கூறிவிட்டு சென்ற மாணவி, வீடு செல்லவில்லை.
மாணவியின் தந்தை தேசூர் போலீசில் கடந்த, 3ம் தேதி புகார் செய்தார். விசாரணையில், விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அடுத்த தாழனுாரைச் சேர்ந்த உதயசங்கர், 22, மாணவியை காதலித்து, திருமண ஆசை காட்டி கடத்தி சென்று பலாத்காரம் செய்தது தெரியவந்தது.
போக்சோவில் உதயசங்கரை போலீசார் கைது செய்தனர். உதயசங்கர், இரு ஆண்டுகளுக்கு முன், மழையூர் கிராமத்தில் டாஸ்மாக் கடை சுவற்றை துளையிட்டு திருடிய வழக்கில் கைது செய்யப்பட்டு, ஜாமினில் வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
10 வயது சிறுமி சீரழிப்பு
தஞ்சாவூர் மாவட்டம், திருவோணம் போலீஸ் சரகத்திற்குட்பட்ட, கிராமத்தைச் சேர்ந்த 5ம் வகுப்பு படிக்கும், 10 வயது மாணவி, பள்ளியில் இரண்டு நாட்களாக சோர்வாக இருந்துள்ளார். கண்காணித்த ஆசிரியை, மாணவியிடம் விசாரித்தபோது, மாணவி தன்னி டம் இரண்டு பேர் தவறாக நடந்து கொண்டதாகக் கூறியுள்ளார். உடனே பெற்றோருக்கு தெரிவிக்கப்பட்டது. சிறுமியை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போது, பாலியல் தொல்லைக்கு ஆளானது தெரிய வந்தது.
![]() |
தந்தை, மகனுக்கு 'காப்பு'
அரியலுார் மாவட்டம், ஓலையூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சிவகுருநாதன் மகன் பிரவீன்குமார், 30; கூலித் தொழிலாளி. இவர், 10ம் வகுப்பு பயிலும் 15 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். சிறுமியின் பெற்றோர், பிரவீன்குமாரை கண்டித்தனர்.
ஆத்திரம் அடைந்த பிரவீன்குமாரும், அவருக்கு ஆதரவாக அவரது தந்தையும் சேர்ந்து சிறுமியையும், சிறுமியின் பெற்றோரையும் கொலை செய்துவிடுவதாக மிரட்டியுள்ளனர். சிறுமியின் பெற்றோர் ஜெயங்கொண்டம் அனைத்துமகளிர் போலீசில் புகார் செய்தனர். போலீசார் பிரவீன்குமாரையும், சிவகுருநாதனையும் போக்சோவில் கைது செய்தனர்.