ADDED : மார் 17, 2025 07:20 AM

சென்னை: தமிழகத்தில் பல்வேறு இடங்களில் நேற்று (மார்ச் 16) சிலர் போக்சோ வழக்குகளில் கைது செய்யப்பட்டுள்ளனர். அதன் விபரம் பின்வருமாறு:
நேற்றைய போக்சோ
இன்ஜினியர் கைது
திண்டுக்கல் மாவட்டம், சின்னாளபட்டியைச் சேர்ந்த இன்ஜினியர் பாண்டித் துரை, 36, பெங்களூரில் பணிபுரிகிறார். சில தினங்களுக்கு முன் குடும்பத்துடன் சொந்த ஊருக்கு திருவிழாவிற்காக வந்தார்.
ரோட்டோரத்தில் நடந்து சென்ற 13 வயது பள்ளி மாணவியை அவரது வீட்டில் விடுவதாக கூறி, பாண்டித்துரை டூவீலரில் அழைத்துச் சென்று பாலியல் தொல்லை கொடுக்க முயற்சித்தார்.
அம்மாணவி அவரிடமிருந்து தப்பி வந்து, பெற்றோரிடம் கூறினார். சாணார்பட்டி மகளிர் போலீசார் விசாரித்து, 'போக்சோ'வில் பாண்டிதுரையை கைது செய்தனர்.
ஆசிரியருக்கு வலை
திருநெல்வேலி மாவட்டம், களக்காடு அருகே உள்ள மாவடி புதூரைச் சேர்ந்தவர் மோகன்,54; உடற்கல்வி ஆசிரியர். இவர், நேற்று முன்தினம், பள்ளியில் ஒரு மாணவியை அறைக்கு தனியாக அழைத்துச் சென்று, பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.
இது குறித்த புகாரில், நாங்குநேரி மகளிர் போலீசார், போக்சோ வழக்கு பதிவு செய்து, தலைமறைவான உடற்கல்வி ஆசிரியரை தேடி வருகின்றனர்.