sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, செப்டம்பர் 05, 2025 ,ஆவணி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

நேற்றைய தினம் போக்சோ வழக்குகளில் கைதானவர்கள்!

/

நேற்றைய தினம் போக்சோ வழக்குகளில் கைதானவர்கள்!

நேற்றைய தினம் போக்சோ வழக்குகளில் கைதானவர்கள்!

நேற்றைய தினம் போக்சோ வழக்குகளில் கைதானவர்கள்!

1


ADDED : ஆக 01, 2025 07:44 AM

Google News

1

ADDED : ஆக 01, 2025 07:44 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: தமிழகத்தில் பல்வேறு இடங்களில் நேற்று (ஜூலை 31) சிலர் போக்சோ வழக்குகளில் கைது செய்யப்பட்டுள்ளனர். சிலருக்கு தண்டனைகளையும் நீதிமன்றம் அறிவித்துள்ளது. அதன் விபரம் பின்வருமாறு:

வடமாநில வாலிபர் கைது

திருவள்ளூர் மாவட்டம், கனகம்மாசத்திரம் அருகே சென்னை-திருப்பதி தேசிய நெடுஞ்சாலை விரிவாக்கப் பணிகளில், அசாம் மாநில தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர்; அங்கு கொட்டகை அமைத்து தங்கியுள்ளனர்.

கனகம்மாசத்திரம் அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்த, 17 வயது சிறுமி நேற்று காலை, இயற்கை உபாதை கழிக்க முட்புதர் பக்கமாக சென்றார்.

இதை கண்காணித்த, அசாம் மாநிலத்தைச் சேர்ந்த ஹெக்ராமுல் அலி, 26, என்பவர், சிறுமியின் வாயைப்பொத்தி, பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றுள்ளார். அவரிடமிருந்து தப்பிய சிறுமி, ஓடிப்போய் கிராமத்தினரிடம் கூறினார்.

இதையடுத்து, உறவினர்கள் மற்றும் கிராமத்தைச் சேர்ந்த, 30க்கும் மேற்பட்டோர், மறைந்திருந்த ஹெக்ராமுல் அலியை பிடித்து, கனகம்மாசத்திரம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். போலீசார் அவரை கைது செய்தனர்.

ஐந்து ஆண்டு சிறை

ஊட்டி அருகே உள்ள ஒரு பகுதியை சேர்ந்த விஜய்,25, என்பவர் அதே பகுதியில் வசிக்கும் சிறுமியை பள்ளியிலிருந்து வீட்டுக்கு அழைத்து சென்றுள்ளார். அப்போது, சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றுள்ளார்.

வீட்டுக்கு வந்தவுடன் சிறுமி சோர்வாக இருப்பதை கண்ட அவரது பெற்றோர் சிறுமியிடம் விசாரித்துள்ளார். சிறுமி நடந்ததை கூறியதை அடுத்து, ஊட்டி அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளிக்கப்பட்டது. விசாரணை மேற்கொண்ட போலீசார், 2020ம் ஆண்டு பிப்., 5ம் தேதி விஜயனை கைது செய்தனர்.

வழக்கு விசாரணை, ஊட்டி மகிளா கோர்ட்டில் நடந்து வந்தது. நேற்று முன்தினம் தீர்ப்பு வழங்கப்பட்டது. அதில், விஜயனுக்கு, 5 ஆண்டு சிறை தண்டனை, 5,000 ரூபாய் அபராதம் விதித்து நீதிபதி செந்தில்குமார் உத்தரவிட் டார்.

பாலியல் அத்துமீறல்

திருப்பூர், கே.வி.ஆர்., நகரில் கதிரவன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி செயல்படுகிறது. நேற்று முன்தினம் மாலை கழிவறைக்கு சென்ற, முதல் வகுப்பு படித்து வரும், ஆறு வயது சிறுமியிடம், துாய்மைப்பணியில் ஈடுபட்ட அசாம் மாநிலத்தை சேர்ந்த தனஞ்ஜெய் நாசாரி, 22 என்பவர், பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டார். இதனால், அசாம் வாலிபர் மீது போலீசார் 'போக்சோ' வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.

சிறுமியிடம் பாலியல் அத்துமீறல் விவகாரம் தொடர்பாக, முதலில் தகவலறிந்த ஆசிரியை மற்றும் பள்ளி தரப்பினர் மூடி மறைப்பதாக குற்றம்சாட்டி நேற்று காலை ஏராளமான பெற்றோர் மற்றும் பொதுமக்கள் திரண்டு, பள்ளியை முற்றுகையிட்டனர். இதில் தொடர்புடையவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பா.ஜ., வடக்கு மாவட்ட தலைவர் சீனிவாசன், மாநில செயலாளர் மலர்க்கொடி உட்பட பா.ஜ., வினர் பங்கேற்றனர்.

காலை, 9:15 மணிக்கு ஆரம்பித்த முற்றுகை போராட்டம் மதியம் வரை தொடர்ந்து நடந்தது. எவ்வித பாரபட்சமும் இல்லாமல், அனைத்து விதமான நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீஸ் தரப்பில் தெரிவித்தனர். ஆனால், பெற்றோர் ஏற்று கொள்ள மறுத்து, பள்ளி முன் மறியலில் ஈடுபட்டனர். இதனால், போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது.






      Dinamalar
      Follow us