sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

நேற்றைய தினம் போக்சோ வழக்குகளில் கைதானவர்கள்!

/

நேற்றைய தினம் போக்சோ வழக்குகளில் கைதானவர்கள்!

நேற்றைய தினம் போக்சோ வழக்குகளில் கைதானவர்கள்!

நேற்றைய தினம் போக்சோ வழக்குகளில் கைதானவர்கள்!


UPDATED : ஆக 11, 2025 09:49 AM

ADDED : ஆக 11, 2025 07:31 AM

Google News

UPDATED : ஆக 11, 2025 09:49 AM ADDED : ஆக 11, 2025 07:31 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: தமிழகத்தில் பல்வேறு இடங்களில் நேற்று (ஆகஸ்ட் 10) சிலர் போக்சோ வழக்குகளில் கைது செய்யப்பட்டுள்ளனர். அதன் விபரம் பின்வருமாறு:

சிறுமியருக்கு தொந்தரவு


நீலகிரி மாவட்டம், கூடலுார் அருகே உள்ள பழங்குடியின கிராமத்தை சேர்ந்த, ஐந்தாம் வகுப்பு படிக்கும் சிறுமியர், தாங்கள் படிக்கும் பள்ளியில் நடந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் சில நாட்களுக்கு முன் பங்கேற்ற போது, 'தங்கள் வீட்டின் அருகே உள்ள மூன்று தாத்தாக்கள், பாலியல் தொல்லை கொடுக்கின்றனர்' என, தெரிவித்தனர்.

உடனடியாக, 'சைல்டு லைன்' நிர்வாகிகளுக்கு ஆசிரியர்கள் தகவல் தெரிவித்தனர். அவர்கள் புகாரில், தேவாலா போலீசார், வெள்ளன், 70, விஜயன், 65, செரு, 47, ஆகிய மூவர் மீதும் போக்சோவில் வழக்கு பதிவு செய்தனர். இதில், வெள்ளன், விஜயன் இருவரும், நடந்து செல்ல கூட முடியாத நிலையில் இருந்ததால், செருவை மட்டும் போலீசார் கைது செய்தனர்.

12 வயது சிறுமி கர்ப்பம்

திருவண்ணாமலை மாவட்டம், கிட்டன் குடிசை கிராமத்தை சேர்ந்தவர் கார்த்திக், 22. இவர், வாலாஜா அருகே ஒரு கிராமத்தில் உறவினர் வீட்டில் தங்கி, செங்கல் அறுக்கும் வேலை செய்து வந்தார். அங்கு, 12 வயது சிறுமியிடம் பழகி, பலாத்காரம் செய்துள்ளார். சிறுமி உடல்நிலை பாதித்ததால், மருத்துவ பரிசோதனையில் அவர் மூன்று மாத கர்ப்பமாக இருப்பது தெரிந்தது. ராணிப்பேட்டை மகளிர் போலீசார், போக்சோவில் கார்த்திக்கை நேற்று கைது செய்தனர்.

போக்சோ'வில் ஒருவர் மீது வழக்கு


தேனி மாவட்டம், போடியில் உள்ள தேவாரம் சாலைத் தெரு நாகேந்திரன் 23. இவர் இதே ஊரைச் சேர்ந்த 17 வயது சிறுமியை காதலிப்பதாக ஆசை வார்த்தை கூறி, நான்கு மாதங்களுக்கு முன் கடத்திச் சென்று திருமணம் செய்துள்ளார். தற்போது சிறுமி கர்ப்பமாக உள்ளார்.

போடி அனைத்து மகளிர் போலீசார் நாகேந்திரன் மீது போக்சோ சட்டப் பிரிவில் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

பெற்றோர் மீது போக்சோ


மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே ஒரு கிராமத்தை சேர்ந்த 17 வயது சிறுமி, 2024ல் அரசு பள்ளியில் பிளஸ் 1 படித்தார். இவரின் தாய் வேலை செய்த ஓட்டலுக்கு அடிக்கடி வந்து சென்ற லோடுமேன் ஒருவருடன், சிறுமிக்கு பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியது.

இந்த காதலுக்கு பெற்றோர் சம்மதம் தெரிவித்து இருவருக்கும் 2024 நவ. 29ல் விருதுநகரில் திருமணம் செய்து வைத்தனர். சிறுமி கர்ப்பமாகி மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

அங்கு ஆதார் அட்டையில் இருந்த பிறந்த தேதியின் படி சிறுமிக்கு குழந்தை திருமணம் நடந்ததால் கர்ப்பமானது கண்டறியப்பட்டது.

விருதுநகர் மாவட்ட சமூகநலத்துறையின் பரிந்துரையில் விருதுநகர் மகளிர் போலீசார் சிறுமியிடம் விசாரணை செய்து கணவர், மாமனார், மாமியார், சிறுமியின் தாய், உறவினர் தம்பதி உட்பட 6 பேர் மீது போக்சோவில் வழக்கு பதிந்தனர்.






      Dinamalar
      Follow us