52 பணியிடங்களுக்கு ஆயிரக்கணக்கில் குவிந்த இளைஞர்கள்
52 பணியிடங்களுக்கு ஆயிரக்கணக்கில் குவிந்த இளைஞர்கள்
UPDATED : நவ 21, 2025 09:33 PM
ADDED : நவ 21, 2025 09:31 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கிருஷ்ணகிரி: காலணி தயாரிக்கும் நிறுவனத்தில் 52 பணியிடங்களுக்கு ஆள் சேர்ப்பு பணிக்காக ஆயிரக்கணக்கான இளைஞர்கள் குவிந்தனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளியில் காலணி தயாரிக்கும் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இங்கிருந்து 8 கி.மீ., சுற்றளவில் உள்ள நபர்களுக்கு மட்டுமே வேலைவாய்ப்பு அளிக்க முன்னுரிமை அளிக்கப்பட்டு வருகிறது. இரண்டு ஆண்டுக்கு பின்பு, இங்கு 52 பணியிடங்களுக்கு ஆள் சேர்ப்பு பணி நடந்தது. இது குறித்து அறிந்த உள்ளூர் இளம்பெண்கள் மற்றும் இளைஞர்கள் மட்டும் அல்லாமல் வெளியூர்களில் இருந்தும் நிறுவனத்தின் முன்பு குவிந்தனர்.ஆயிரக்கணக்கான பேர் திரண்டதைத் தொடர்ந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போச்சம்பள்ளி போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

