தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ராணிப்பேட்டை/சோளிங்கர் அருகே செம்மரம் கடத்திய மூவருக்கு 'காப்பு'

சோளிங்கர் அருகே செம்மரம் கடத்திய மூவருக்கு 'காப்பு'

சோளிங்கர் அருகே செம்மரம் கடத்திய மூவருக்கு 'காப்பு'


UPDATED : நவ 12, 2026 07:58 PM

ADDED : நவ 12, 2026 07:04 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 12, 2026 07:58 PM ADDED : நவ 12, 2026 07:04 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சோளிங்கர்: சோளிங்கர் அருகே, செம்மரக்கட்டைகள் கடத்திய, மூவரை வனத்துறையினர் கைது செய்தனர்.

ராணிப்பேட்டை மாவட்டம், நீலகண்டராயப்பேட்டை காப்புக்காடு பகுதியில் செம்மரக்கட்டைகளை வெட்டி, காரில் கடத்தப்படுவதாக ராணிப்பேட்டை வனச்சரக அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதையடுத்து, வனத்துறை அலுவலர் சரவணபாபு தலைமையிலான வனத்துறையினர் அப்பகுதியில் தீவிர சோதனை மேற்கொண்டனர். அப்போது, காப்புக்காடு பகுதியில் அனுமதியின்றி சட்டவிரோதமாக செம்மரக்கட்டைகளை வெட்டி, காரில் கடத்த முயன்றது தெரியவந்தது.

கடத்தலில் ஈடுபட்ட திருப்பத்துார் மாவட்டம், கம்முகுடி ராமகிருஷ்ணன், 39, தேவேந்திரன், 41, பாக்யராஜ், 35, ஆகிய மூவரை வனத்துறையினர் கைது செய்தனர். அவர்களிடமிருந்து, அரை டன் எடை கொண்ட, ஏழு செம்மரக்கட்டைகள் மற்றும் காரை வனத்துறையினர் பறிமுதல் செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us