ADDED : செப் 30, 2025 07:21 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை : ஆவின் நிர்வாக இயக்குநர் அண்ணாதுரை உள்ளிட்ட, மூன்று ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
ஆவின் நிர்வாக இயக்குநராக இருந்த அண்ணாதுரை, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக நிர்வாக இயக்குநராக பணியிடமாற்றம் செய்யப்பட்டு உள்ளார்.
தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக நிர்வாக இயக்குநராக இருந்த ஜான் லுாயிஸ், ஆவின் நிர்வாக இயக்குநராக நிய மிக்கப்பட்டுள்ளார். உயர் கல்வித்துறை இணை செயலராக இருந்த கற்பகம், சென்னை மாநகராட்சி கல்வித்துறை இணை ஆணையராக நிய மனம் செய்யப்பட்டு உள்ளார்.
இந்த உத்தரவை, தலைமை செயலர் முருகானந்தம் பிறப்பித்து உள்ளார்.