சென்னை - பெங்களூரு டபுள் டெக்கர் ரயிலில் மூன்று 'ஏசி' இல்லா பெட்டி
சென்னை - பெங்களூரு டபுள் டெக்கர் ரயிலில் மூன்று 'ஏசி' இல்லா பெட்டி
ADDED : ஜன 06, 2024 08:16 PM
சென்னை:சென்னை சென்ட்ரல் - கே.எஸ்.ஆர்., பெங்களூரு இடையே இயக்கப்படும், 'ஏசி' டபுள் டெக்கர் விரைவு ரயிலானது, பிப்ரவரி, 15ம் தேதி முதல் 15 பெட்டிகள் இணைத்து இயக்கப்படுகிறது.
சென்னை - கர்நாடகா மாநிலம் பெங்களூரை இணைக்கும் வகையில், 2020 அக்டோபர் மாதத்தில், 'ஏசி' டபுள் டெக்கர் விரைவு ரயில் சேவை துவங்கியது. சென்னை சென்ட்ரலில் இருந்து காலை, 7:25 மணிக்கு புறப்படும் ரயில், மதியம், 1:10 மணிக்கு பெங்களூரு சென்றடையும்.
பெங்களூரில் மதியம், 2:30க்கு புறப்படும் ரயில், இரவு, 8:35 மணிக்கு சென்னை சென்ட்ரல் வந்தடையும். 12 பெட்டிகள் உடைய இந்த ரயிலுக்கு வரவேற்பு உள்ளது. எனவே, இந்த ரயிலில், 'ஏசி' வசதி இல்லாத சில பெட்டிகளை இணைத்து இயக்க வேண்டும் என, பயணியர் கோரிக்கை விடுத்தனர்.
இந்நிலையில், 'ஏசி' டபுள் டெக்கர் விரைவு ரயிலில், பிப்., 15 முதல், 15 பெட்டிகள் இணைத்து இயக்க தெற்கு ரயில்வே முடிவு செய்துள்ளது. கூடுதலாக இணைக்கப்படும் மூன்று பெட்டிகளில், 'ஏசி' வசதி இருக்காது. இதற்கான, அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என, எதிர்பார்க்கப்படுகிறது.